Home Women Part குழந்தையின்மைக்கு பெண்கள்தான் முக்கிய காரணமா ?  

குழந்தையின்மைக்கு பெண்கள்தான் முக்கிய காரணமா ?  

186
0
SHARE

ல்லவே இல்லை. மூன்றில் ஒரு பங்கு பிரச்சினைக்கு மட்டுமே பெண் காரணமாக இருக்கிறாள். இன்னும் ஒரு பங்கு பிரச்சினைக்கு ஆண் காரணமாக இருக்கிறான். மூன்றாவது பங்குக்கு ஆண் , பெண் இருவரும் இணைந்து காரணமாக இருக்கிறார்கள்.

குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நேரம் எது ?

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு கொள்ளும் தம்பதியருக்கு, ஒரு வருட காலம் கடந்த பின்னரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால், புள்ளி விவர கணக்கின்படி ஒரு வருடத்திற்குப் பின்னர் கர்ப்பம் உண்டாக வாய்ப்பு குறையத் தொடங்குகிறது.

பாதுகாப்பான முறையில் உறவு கொள்ளும் தம்பதியர்கள், பாதுகாப்பு முறையைக் கைவிட்ட ஆறு மாதங்கள் கழிந்த பின்னரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால்…..30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு குறைவு என்பதால், இந்த வயதில் திருமணம் செய்யும் பெண்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரை சந்திப்பது நல்லது.

முறையான மாதவிலக்கு இல்லாத பெண்கள், மற்றும் கடுமையான வலியுடன் மாதவிலக்கைச் சந்திப்பவர்கள், மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே கர்ப்பம் தரிக்க இயலும்.

கர்ப்பம் உண்டாகி, நிலைத்து நிற்க முடியாமல் ஏற்கனவே கலைந்து போயிருந்தால் மருத்துவர் மேற்பார்வை அவசியம்.

செக்ஸ் சம்பந்தமான நோய்கள், குறைபாடுகள் இருப்பதாக ஆண், பெண் இருவரும் சந்தேகித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மருத்துவரை அணுகியதும் என்ன பரிசோதனைகள் மேற்கொள்வார்கள் ?

முதலில் தம்பதியர்கள் உடல்நிலையும், செக்ஸ் நடவடிக்கைகளும் திருப்திகரமான அளவில் இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஏனென்றால் மிகக் குறைந்த நேர உறவு, என்றாவது ஒரு நாள் உறவு கொள்ளுதல் போன்ற சில பிரச்சினைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு தேவையான ஆலோசனைகளும், மருந்துகளும் கொடுக்கப்படும்.

இதனால்தான் குழந்தையின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதை கவுன்சிலிங் நேரத்தின்போது மருத்துவரால் திட்டவட்டமாக கண்டறியப்படாத பட்சத்தில் மட்டுமே பரிசோதனைகள் செய்யப்படும்.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை, அமைப்பு, அசைவு போன்றவை ஆராயப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் ஹார்மோன் பரிசோதனை செய்யப்படும்.

பெண்களைப் பொறுத்தவரை கருமுட்டை ஒவ்வொரு மாதமும் சரியாக வெளிவருகிறதா என்பதுதான் முதல் பரிசோதனையாகும். கருமுட்டை சரியாக வெளியாகிறது என்பதை ஒவ்வொரு பெண்ணும் வீட்டில் இருந்தபடியே சில பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here