Home Women Part ​கரு முதல் குழந்தை வரை – பாகம் 66

​கரு முதல் குழந்தை வரை – பாகம் 66

203
0
SHARE

கேள்வி ?
ர்ப்ப காலத்தில் பெண்களின் அழகு அதிகரிப்பது ஏன் ? ஆனால் , என் மனைவி மட்டும் ஒல்லியாக இருக்கிறாள் . இது ஏன்?

பதில்
பருவமடையும் போது எவ்வாறு ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து சிறுமியை அழகிய இளம்பெண்ணாக மாற்றுகிறதோ, அப்படித்தான் கருவுறும் காலத்திலும் பலவித ஹார்மோன்கள் சுரந்து மாற்றம் ஏற்படுத்துவதால் கர்ப்ப காலத்தில் பெண்களின் அழகு கூடுகிறது . ஒட்டிய கன்னம் உள்ள பெண்கள்கூட பூசிய முகத்தோடு பொலிவு பெறுவது கர்ப்ப காலத்தில்தான் . அவ்வாறு பெறாவிட்டால் ,ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று பொருள் . உடல்வாகு , பரம்பரையாக இருக்கலாம் . ஊட்ட குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் . ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்கலாம் . நோய்த்தொற்றுகூட இருக்க வாய்ப்பு உண்டு . மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் .

கர்ப்ப காலத்தில் , உடலுக்குள் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது . ஹார்மோன்கள் செய்யும் இந்த மாற்றத்தினால் சருமம் நிறம் மாறுகிறது . நகங்கள் பழுப்பாக தெரிகின்றன .

பிரச்சனை ஏதாவது ஏற்படுவதாக இருந்தால் , தோல் நோய் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள் . பிரச்சனை ஏதும் இல்லாவிட்டால் , முகத்துக்கு மேக் -அப் போடுவதால் எந்த பிரச்சனையும் வந்து விடாது.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here