Home Common Health Problems ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 36

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 36

    497
    0
    SHARE

    எர்கனாமிக்ஸ் பாதிப்புகள்

    கம்ப்யூட்டர் ஊழியர்கள் பயன்படுத்தும் சாதனங்களின் முறை கேடான அமைப்புகள் மூலமாக உருவாகும் நோய்களை எர்கனாமிக்ஸ் பாதிப்புகள் என்கிறார்கள் . இதை வகைப்படுத்தி பார்க்க வேண்டியது மிக அவசியம் . அதாவது அலுவலக அமைப்பு , பணியிட அமைப்பு கம்ப்யூட்டர் அமைப்பு , லேப்டாப் அமைப்பு, சேர் மற்றும் டேபிள் அமைப்பு என்று தனித்தனியாக சரி செய்தால் மட்டுமே கண் பிரச்சனையில் தொடங்கி கழுத்துவலி முதுகுவலி போன்ற அனைத்து சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க முடியும் .

    அலுவலகத்திஇந்த சுவரில் பொருத்தப்படும் விளக்குகள் மற்றும் தலைக்கு மேல் இருக்கும் விளக்குள் மேஜையில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் குறைவாகவே இருக்க வேண்டும் .

    பணிபுரியும் அனைவருக்கும் போதுமான காற்று சரியான அளவில் கிடைக்கும்படி வென்டிலேசன் அமைக்கபட்டிருக்க வேண்டும் .

    ஏ. சி மெஷினுக்கு நேர் கீழே ஊழியரின் இருக்கையை அமைக்கக்கூடாது . குளிர்சாதனத்துக்கு கேழே இருக்கை அமைந்தால் ஊழியர் விரைவாகவே சோர்ந்துவிடுவார் . மேலும் , பல்வேறு நோய்கள் அவரை எளிதில் தொற்றி கொள்ள கூடும் .

    பணி நேரம் என்பது தொடர்ச்சியாக இருக்கும்படி அமைக்க கூடாது . அவ்வப்போது ஐந்து முதல் பத்து நிமிட இடைவெளி இருக்க நல்லது .

    மாதம் ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனையை ஊழியர்களுக்கு நடத்துவது நல்லது .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here