Home Women Part பெண்கள் பிரச்சனைகள் தீர்வு

பெண்கள் பிரச்சனைகள் தீர்வு

228
0
SHARE

கேள்வி :
நான் ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். என் கணவர் லாரி டிரைவர். நான் அவருக்கு இரண்டாவது மனைவி. என் வயது 35. எங்களுக்கு குழந்தை இல்லை. நான் தாய்மை அடையும் ஆசையில் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறேன். கடந்த முறை பரிசோதனைக்கு சென்றபோது டாக்டர், கருவணு விடுபட்டிருக்கிறதா? என்று கேட்டார். எனக்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதனால் நான் எதையோ சொல்லி சமாளித்துவிட்டேன். கருவணு விடுபடுதல் என்றாலென்ன?

பதில்:
சுமார் இருபது சதவீதம் பெண்களுக்கு கருவணு விடுபடாமையால் குழந்தைப்பேறு வாய்ப்பதில்லை. கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்போது, கருவணு விடுபடாமை தொடர்ந்து இருப்பதால், மாத்திரைகளை நிறுத்திய பின்னரும் சிலருக்கு முட்டை விடுபடுவதில்லை. இதனால் கருத்தரிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.

இந்த நிலையை அறிந்திருக்கும் மருத்துவர்கள், பெண்ணிடம், உடல்நலம், மாதவிலக்குப் பிரச்சினைகள், தாம்பத்திய உறவு என ஒவொவொன்றாக ஆராயும்போது, கருவணு விடுபடுகிறதா என்பதையும் குறிப்பாக ஆராய்கிறார்கள்.கருப்பை நன்றாக இருந்து, மாதவிலக்கும் சீராக இருந்தால் முட்டை சீராக விடுபடும். ஹார்மோன்களும் சீராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முட்டை வெளியாகாது. உங்களுக்கு கரு முட்டை முதிர்ந்து வெளிப்படுவதில் சிக்கல் இருந்தால், மருந்துகள் மூலம் அதை சரி செய்துவிடலாம். இது குறித்து உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here