Home pregnancy எல்லோருக்கும் குழந்தை

எல்லோருக்கும் குழந்தை

200
0
SHARE

கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?

சர்க்கரை, கொழுப்பு போன்றவை கட்டுப்பாட்டு அளவை மீறிவிடக் கூடாது.

மாமிச உணவைத் தவிர்த்து காய்கறி, பழங்கள், கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்,

எடை திடீரென அதிகரித்து விடாமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

செக்ஸ் நோய் ஏதாவது இருப்பது போன்று தெரிந்தால், உடனே அதற்கான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சரியான அளவில் இருக்கிறதா என்பதைக் கண்காணித்தல் வேண்டும்.

அதிகப்படியான உடற்பயிற்சி தினமும் மேற்கொள்வதை கைவிட வேண்டும்.

புகைபிடித்தல், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், அதனை விடவேண்டும்.

மருத்துவரை சந்தித்து, அவசரப்படாமல் குழந்தை பெறுவதற்கான வழிமுறையினை பின்பற்ற வேண்டும்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது ?

ஆண்மைக் குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்கு தான் காரணம் இல்லை என்றும் நம்புகிறார்கள். ஆனால் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தைப்பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலைதான் ஆண் மலட்டுத்தன்மை எனப்படுகிறது.

பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் . இதுவே ஆண்மைக்குறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

புகைபிடித்தல், ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.


வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

பிறவியிலேயே “ஒய்” குரோமோசோம்களை உடம்பில் குறைவாக வைத்திருக்கும் ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அம்மை நோய்தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி, உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.

உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.

பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம்.

விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.

உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

ஆணின் விரையைச் சுற்றியுள்ள ‘வெரிகோஸ் வெயின் ‘ எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்பநிலையை அடையும் பட்சத்தில்உயிரணு உற்பத்தி பாதிக்கப் படுகிறது.

வேறு சில நோய்களுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here