Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 122

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 122

176
0
SHARE

பாலுறவுத் திறனை மீண்டும் பெரும் வழிகள் :

அதிர்ஷ்டவசமாக பாலுறவுத் திறனை மீண்டும் அடைவதற்கான நிறைய சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன. மாத்திரைகள் மற்றும் ஆணுறுப்பில் ஊசி போடுதல் ஆகியவை முக்கியமான சிகிச்சைகளாகும்.

வாய் வழி மருந்துகள் :

வயாகரா மாத்திரை – சர்க்கரை வியாதியுள்ள 40 முதல் 50 விழுக்காட்டினருக்கு இது நல்ல பலன் தருகிறது. ஆணுறுப்பினுள் செயல்திறன் மாற்றத்திற்கு வழி வகுத்து விரைப்பை உண்டாக்குகிறது. இவை தவிர சையாலிஸ் மற்றும் லெவிட்ரா ஆகிய இரண்டு புதிய மாத்திரைகளும் இதே வழியில் செயல்படுகின்றன. இவை பாதுகாப்பானவை என்றாலும், ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு, முகம் மற்றும் கழுத்துப்பகுதி சிவத்தல், தசை வழி, அஜீரணக் கோளாறு, தலைவலி போன்றவை ஒரு சில பக்க விளைவுகள் ஆகும்.

இதய நோய்க்காக நைட்ரேட் மருந்து எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

நைட்ரேட் மருந்துகளில் தெளிப்பான் வடிவிலோ அல்லது நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளும் மாத்திரை போன்றோ குறைந்த காலம் செயல்படக் கூடியது போன்ற மருந்துகளும் அடங்கும்.

பாலுறவுத் திறனை பலப்படுத்த உடற்பயிற்சிகள் தேவை என்பதால், இதய நோயாளிகள் அதிகமான சிரமம் எடுத்து உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். இதையும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை உடற்பயிற்சி செய்யவேண்டுமானாலும் அதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

உப்ரிமா என்றொரு மாத்திரை மூளையைத் தூண்டி விரைப்புத் தன்மையை உண்டாக்குகிறது. இந்த மாத்திரையால் குமட்டல் மற்றும் கொட்டாவி போன்ற பக்கவிளைவுகள் தோன்றுவதும் தெரிய வந்துள்ளது.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here