Home pregnancy எல்லோருக்கும் குழந்தை

எல்லோருக்கும் குழந்தை

455
0
SHARE

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன ?

குழந்தையின்மை காரணத்திற்கு ஒரு பெண் காரணம் எனும்போது அவள் அடையும் அதிர்ச்சியை விட, ஆண் காரணம் என அறியும்போது அதிகமாக பாதிப்பு அடைகிறான். இனி தான் எதற்குமே லாயக்கில்லை என்று எண்ணுகிறான்.

பிறவிக்குறைபாடு காரணமாக ஏற்பட்டிருக்கும் விந்தணுக் குறைபாடு தவிர, மற்ற எல்லாமே தீர்க்கப் படக்கூடியவைதான் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

அதிக உடற்பயிற்சி, உடற்பருமன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும்.

சிகரெட், மது மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிப்பது மற்றும் மனதை டென்ஷன் இல்லாமல் வைத்துக் கொள்வது போன்றவை முக்கியமானவை.

வீரியமான மருந்துகள் உட்கொள்வதாக இருந்தால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே உறவு கொள்வது என்பதை தவிர்த்து முடிந்தவரை தினமும் உறவு கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு சில பணியிடங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த குறைபாடு அதிகம் ஏற்படுகிறது என்பதால், அவர்கள் வேலையை மாற்றிக் கொள்வது அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்வது நல்லது.

இந்த குறைபாடுகளை வெளியே சொல்ல கூச்சப்பட்டு, தகுதி இல்லாத மருத்துவர்களை சந்திப்பதும், தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வதும் ஆண்மைகுறைவினை அதிகப்படுத்திவிடும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here