Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 123

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 123

193
0
SHARE

ஆண்மைக் குறைபாடுள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் ?

முழுமையான பரிசோதனை மற்றும் காரணங்களை கண்டறியும் வசதிகள் கொண்ட மருத்துவமனையை அணுக வேண்டும்.

திரும்ப வந்துவிடும் பிரச்சினைகளை கண்டறிந்து அவை வராதவாறு சிகிச்சையளிக்கும் திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவர் இருக்க வேண்டும்.

விரைப்புத் தன்மையை உண்டாக்குவதற்காக முதலிலேயே மேஜர் சிகிச்சைகளை செய்து விடாமல் முதல் நிலை சிகிச்சையிலிருந்து துவங்க வேண்டும்.

முதல் நிலை சிகிச்சை என்பது வாக்யூம் கருவியைப் பயன்படுத்தி விரைப்புத் தன்மையை உண்டாக்குதல் .

வாய்வழி மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்தல்.

இரண்டாம் நிலை சிகிச்சையாக ஊசி செலுத்துதல், மருந்தில் தேவையான பிறவகை மருந்தை கலந்து செலுத்துதல், சிறுநீர் துவாரத்தின் வழியே மருந்து வைத்தல் போன்றவை.

இவைகளுக்கு பலனளிக்காத நிலையில்தான் மூன்றாம் நிலை சிகிச்சையாக இரத்த நாள அறுவை சிகிச்சை, இம்ப்ளான்ட் முறையில் பதியம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here