Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 119

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 119

348
0
SHARE

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 68
விந்து முந்துவது ஏன்?

விந்து முந்துதல் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? இதற்கும் ஆண்மைக்குறைவுக்கும் என்ன தொடர்பு என பலர் கேட்கிறார்கள்,
பாலுறவு நிகழ்ச்சியில்
விரைப்பு
செயல்படுதல்
உச்சக்கட்டம்
ஆகிய நிலைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். சிலருக்கு விரைப்பு ஏற்பட்ட உடனோ அல்லது செயல்படத் தொடங்கிய உடனோ, செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது இடையிலோ விந்து வெளியேறிவிடும். இந்த நிகழ்ச்சியால் மனைவியை திருப்திப்படுத்த இயலாத நிலை தோன்றும். இத்தகைய நிகழ்வுக்கு விந்து முந்துதல் என்று பெயர்.

சுமார் 90 விழுக்காடுபெண்கள் தாங்கள் முழுமையான உச்சக்கட்டத்தை அடைவதில்லை என்றும், அதற்குள் தங்கள் கணவர்கள் பாலுறவை முடித்துக்கொள்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்படும் பிரச்சனையை சுயநலத்தினால் ஆண்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதாக நினைத்து பெண்கள் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள்.

பொதுவாக பாலுறவின் போது முன்விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பது பல ஆண்களுக்குத் தெரிவதில்லை. முன்விளையாட்டு ஈடுபட்டு மனைவியைத் தூண்டி தயார்படுத்தி பாலுறவு கொள்ளும்போது இருவருக்கும் ஒரு சேர உச்சக்கட்டம் ஏற்படுவது உண்டு. ஆனால் முன்விளையாட்டில் ஈடுபடாத ஆண்கள் தங்கள் பாலுறவை மூன்று அலல்து நான்கு நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டு விடுகிறார்கள்.

பாலுறவு பல மணி நேரம் நீடிக்கும் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தவர்கள் நான்கு நிமிடங்களுக்குள் பாலுறவு முடிந்து போவதால் தங்களுக்கு இயலாமை ஏற்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு, மனைவியைக் கூட நிமிர்ந்து பார்க்கத் தைரியமில்லாத நிலைக்குப் போய்விடுகிறார்கள்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here