Home Common Health Problems சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 120

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 120

318
0
SHARE

ஆண்மைக்கு குறைபாடுள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
முழுமையான பரிசோதனை மற்றும் காரணங்களை கண்டறியும் வசதிகள் கொண்ட மருத்துவமனையை அணுக வேண்டும்.
திரும்ப வந்துவிடும் பிரச்சனைகளை கண்டறிந்து அவை வராதவாறு சிகிச்சையளிக்கும் திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவர் இருக்க வேண்டும்.
விரைப்புத் தன்மையை உண்டாக்குவதற்காக முதலிலேயே மேஜர் சிகிச்சைகளை செய்துவிடாமல் முதல் நிலை சிகிச்சையிலிருந்து துவங்க வேண்டும்.

முதல் நிலை சிகிச்சை என்பது வாக்யூம் கருவியைப் பயன்படுத்தி விரைப்புத் தன்மையை உண்டாக்குதல்
வாய்வழி மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்தல்
இரண்டாம் நிலை சிகிச்சையாக ஊசி செலுத்துதல், மருந்தில் தேவையான் பிற வகை மருந்தை கலந்து செலுத்துதல், சிறுநீரத் துவாரத்தின் வழியே மருந்து வைத்தல் போன்றவை. இவைகளுக்கு பலனளிக்காத நிலையில்தான் மூன்றாம் நிலை சிகிச்சையாக இரத்த நாள அறுவைச் சிகிச்சை, இம்ப்லாண்ட் முறையில் பதியம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மாத்திரைகள் எதுவும் பலனிக்காத நிலையில் அடுத்தகட்ட சிகிச்சைக்கான ஆயுத்தம்
மாத்திரைகள் பலனிக்காத நிலையில் உங்கள் பாலுறவு பழக்க வழக்கத்தின் அடிப்படையில் சிகிச்சையை தேர்வு சேர்வார். உதாரணத்திற்கு இயல்பான முறையில் நீங்கள் பாலுறவு கொள்வதற்கு விரும்பலாம். அல்லது திட்டமிட்டு பாலுறவு கொள்ள நினைக்கலாம். அதற்கேற்ப சிகிச்சைகள் மாறுபடும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here