வயாகரா, சையாலிஸ், லெவிட்ரா ஆகிய மூன்று மாத்திரைகளும் செயல்படுவதற்கான கால நேரம்
வயாகரா செயல்படுவதற்கு 15 முதல் 30 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதன்விளைவுகள் சுமார் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும்.
சையாலிஸ் 30 முதல் அறுபது நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இதன் விளைவுகள் சுமார் 36 மணி நேரம் வரை நீடிக்கும்.
லெவிட்ரா செயல்படுவதற்கு 30 முதல் அறுபது நிமிடங்களில் செயல்படத் தொடங்கும். இதன் விளைவுகள் நான்கு முதல் ஐந்து மணிநேரம்வரை நீடிக்கும்.
அறுவைச் சிகிச்சைகள்
முழு அளவிலான ஆண்மைக்குறைவு ஏற்பட்டிருப்பவர்களுக்கு அறுவைச்சிகிச்சை ஒன்றேதான் தீர்வு.
அறுவைசிகிச்சையின் மூலம் இரத்த நாள பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் வேறு விதமான பாதிப்புகள் இருந்தாலும் சரிப்படுத்தலாம். தற்போது சிலிக்கான் பொருட்கள் பயன்படுத்தி ஆண் உறுப்பில் விரைப்புத்தன்மையை உண்டாக்கும் அறுவை சிகிச்சை நடைமுறையில் இருக்கிறது.
சிலிக்கான் பொருத்தப்படும்போது ஆணுறுப்பு எப்போதும் விரைத்த நிலையில்தான் இருக்கும். இதைத் தவிர்ப்பதற்காக விரைப்பின்போது மட்டும் விரிந்து பிறகு சுருங்குவதற்கு ஏற்ற சிலிக்கான் உருளைகள் அறுவைசிகிச்சைகள் மூலம் பொருத்தப்படும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்