Home Women Part பெண்கள்….! பிரச்சனைகள்……! தீர்வு….!

பெண்கள்….! பிரச்சனைகள்……! தீர்வு….!

1839
0
SHARE

பெண்கள்….!
பிரச்சனைகள்……!
தீர்வு….!

பெண்கள், பிரச்சனைகள், தீர்வு என்ற இந்த பகுதியில், உங்கள் உடல், மனம் சம்மந்தமான எந்தப்பிரச்னைகள் பற்றியும் கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கு உரிய ஆலோசனைகளை டாக்டர்.கே.எஸ். ஜெயராணி வழங்குவார்.

கேள்வி?
நான் தனியார் வங்கியில் பணி புரிகிறேன். என் வயது 35. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு உடலுறவில் ஆர்வம் இல்லை. என் கணவரும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. என் தோழிக்கும் என் வயதுதான். அவள் இப்போதும் வாரத்தில் இரண்டு நாட்கள் உறவு கொள்வதாக சொல்கிறாள். அவளுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? எனக்கு உடலுறவு ஆசை குறைய என்ன காரணம்? சிகிச்சை மூலம் இந்த குறைபாட்டை சரி செய்ய இயலுமா?

பதில்
பெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு ‘வெளிப்புற காரணிகள்’ என்று இரண்டுவிதமான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி விளக்கமாகச் சொல்கிறேன்.
உடலுறவுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பற்ற நிலை, அந்நியருடன் உடலுறவு, பதற்றம், சமூக அச்சம், கவலை, வீட்டு வேலைகளால் சோர்ந்து போவது, கோரிக்கைகளை வைத்து ஒத்துழைப்பு தராத நிலை, உறவு முறைகளில் ஒத்துப்போகாதது, மனப்போராட்டம் போன்றவற்றால் பெண் உறவுக்கு தயாராகாத நிலையை வெளிப்புறக் காரணிகள் என்று சொல்லலாம்.

பிறவியிலேயே ஏற்படும் இனப்பெருக்க உறுப்புக் குறைகள், தடித்த கன்னித்திரை, பிறப்பு உறுப்பு இல்லாத நிலை, பிறப்பு உறுப்பில் வறட்சி, நோய்கள், ஹார்மோன் குறைகளால் ஆசைகள் தோன்றாத நிலை, உச்சக்கட்டத்தை அடைய முடியாத நிலை போன்றவற்றை உடலியல் காரணங்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

உச்சக்கட்டத்தை பெண் அடையும் நேரத்தில், ஆண் உடலுறவை முடித்துக்கொள்வது என்ற நிலையில் உடலுறவு என்பது வெறுப்புக்கு உரிய விஷயமாக பெண்களுக்குத் தோன்றலாம். இதனாலும் உடலுறவை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

இயல்பாக ஒரு பெண் உடலுறவுக்குத் தயாராவதற்கு மனம் ஓகே சொல்லிவிட்டாலும் அவளது உடல் ஒத்துழைக்க வேண்டும். பிறப்பு உறுப்பில் சுரப்பி நீர் சுரந்து உறுப்பை ஈரமாக்க வேண்டும். இல்லாவிட்டால், உடலுறவின்போது ஆண் உறுப்பு உராய்ந்து எரிச்சலை உண்டாக்கும்.

ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தாலும், பெண் உறுப்பை ஈரமாக்கும். சுரப்பி நீர் குறைவாகச் சுரந்து பெண்ணின் உடலுறவைத் துன்பமானதாக்கிவிடும். அதேபோல், பெண் கவலையாக இருந்தாலும், ஏதேனும் மருந்து மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும், மதுப்பழக்கம் உள்ளவராக இருந்தாலும், இந்தச் சுரப்பு நீர் சுரப்பது மந்தமாகும். இதனால் உடலுறவும் தொல்லையானதாக மாறிவிடும்.

உடலுறவு கொள்வதைப் பற்றி பயப்படும் பெண்ணுக்கும், உடலுறவு ஆசையை அடக்கிவிடும். பெண்ணுக்கும் ஹிஸ்டீரியா பிரச்சனை வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் வருகின்றன. இத்தகைய பெண்கள் பெரும்பாலும் பலவீனத்துடமும், எதையோ பறி கொடுத்ததைப்போலவும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.

செக்ஸை மிக குறைவாக அனுபவித்து அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்களுக்கு வாயுக் கோளாறுகள், இதயம் சார்ந்த பிரச்சனைகள் மூளை மற்றும் தண்டுவடப் பாதிப்புகள், உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன. இறுதியில் உடலின் மொத்த அம்சமே சிதைந்து போய்விடும்.

அதிகமான ஆன்மிக நாட்டம், உடலுறவு ஆசையை அடக்கி வைத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்றவையெல்லாம். தேவையற்ற மனக்குழப்பத்தை உண்டாக்கி நரம்புத் தளர்ச்சிக்கு வழி வகுக்கும். இதுதவிர, பிறப்பு உறுப்புப் பாதையில் தடைகள், உடல்பருமன், சர்க்கரை நோய் , மன இறுக்கம் போன்றவை, பெண்ணுக்கு உடலுறவுக் குறைகளை உண்டாக்குகின்றன. முதலிரவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் கூட அவளுக்கு உடலுறவு குறையை உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்காது. இவர்களின் நாளமில்லாச் சுரப்பிகளை சிகிச்சை மெல்லாம் சரிசெய்த பிறகே உடலுறவு வேட்கையைத்தூண்ட இயலும்.
சரி, உடலுறவு குறைகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
உடலுறவுக் குறைகளைத் தவிர்க்க விரும்பும் பெண்கள், அளவுக்கு மீறிய செக்ஸ் கற்பனைகளில் ஈடுபடக்கூடாது. உடலுறவு குறைத்த தவறான அபிப்பிராயங்கள் இருந்தால் அவற்றைச் சரி செய்துகொள்ள வேண்டும். கருப்பை வாய்ப்பகுதி திறக்காத நிலை இருந்தால் அதை சீரமைத்துக்கொள்ள வேண்டும் கருப்பையில் புண்கள், கட்டி, வலி தரும் தழும்புகள், பிறப்பு உறுப்புப் பகுதியில் நோய்த்தொற்றுகள், நோய்கள், முதுகெலும்பு மற்றும் மூட்டு நோய்கள் போன்றவை இருந்தால் அவற்றையும் சரி செய்துகொள்ள வேண்டும். இதற்காக, மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம் என்பதைப் பெண்கள் உணரவேண்டும்.

உங்கள் கணவரும் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பதாக சொல்கிறீர்கள். அவரையும், உங்களையும் பரிசோதித்து இருப்பவருக்கும் கவுன்சில்ங் மற்றும் சிகிச்சை தேவைப்படும். மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்க இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள். மனமுவந்து சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here