Home Common Health Problems ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் -பாகம் 39

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் -பாகம் 39

    284
    0
    SHARE

     

    கேள்வி ?      நிறுவனங்களில் எப்படிப்பட்ட  உணவுகள் இருக்க  வேண்டும் ?

    பதில்
    தினமும் ஒரு வித்தியாசமான உணவு என்ற ரீதியில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .
    காய்கறிகள் , பழங்கள் , தானியங்கள் நிறைந்த உணவுகளாக இருக்க வேண்டும் .

    கொழுப்பு சத்து இல்லாத உணவுகளையே தேர்ந்துஎடுத்து வழங்க வேண்டும் .
    உப்பு , காரம் போன்றவை குறைவான அளவிலேயே இருத்தல் வேண்டும் .

    உடல்நலத்துக்கு போதுமான அளவில் எல்லா வகையான சத்துப்பொருள்களும் உணவில் அடங்கி இருக்க வேண்டும் .

    உணவு பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிடுக்க வேண்டும் .

    உணவு நேரத்தில் வழங்கப்படும் தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் , சோதனை செய்து சான்றளிக்கப்பட்டதாக இருத்தல் அவசியம் .

    நிறுவன ஊழியர்களது உடல்நலம் என்பது அலுவலகத்துடன் நின்றுவிடுவதில்லை . வீட்டிலும் அவர்களது உடல்நலனுக்கு தேவையான சக்திகள் கிடைக்கவேண்டியது அவசியமாகும் . அதனால் , நிறுவனம் அதற்கு தேவையான உதவிகளையும் , வழிகாட்டுதலையும் செய்வது நல்லது .

    ஏனென்றால் , வீட்டில் ஒருவகையான உணவையும் அலுவலகத்தில் அதற்கு நேர்மாறான உணவையும் சாப்பிட்டால், உடல் நலன் கண்டிப்பாக பாதிக்கப்படும் . சமசீரான உணவு முறையை ஊழியர்களின் முழு குடும்பத்துக்கும் சொல்லி தருவதன் மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here