Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 71

கரு முதல் குழந்தை வரை – பாகம் 71

370
0
SHARE

கேள்வி ?
னக்கு இது முதல் கர்ப்பம் , எத்தகைய உடற்பயிற்சியை செய்யலாம் ?

பதில்
குறிப்பிட்ட தசை பிரிவுகளுக்கு மட்டும் மிகையான சிரமத்தை ஏற்றாமல், உடலின் எடையையும் விசையையும் பல்வேறு தசை பிரிவுகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கும் திறனை உள்ளடக்கியவாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். என்ன செய்யலாம் , என்ன செய்ய கூடாது என்பதை பற்றிய எளிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .

வெறுமனே நிற்பதைவிட பின்னோக்கி நடப்பதும் , முன்னோக்கி நடப்பதும் நல்லதாகும் . இந்த வழியில் நீங்கள் வெவ்வேறு தசை பிரிவுகளை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துகிறீர்கள் . உடல் எடையானது சமமாக பகிர்ந்தளிக்கபடுகிறது.

ஒரு காலை முன்னோக்கி வைத்து நில்லுங்கள் . இது உங்களுடைய எடையை சுலபமாகவும் , திறமையாகவும் ஒரு பாதத்தில் இருந்து இன்னொரு பாதத்துக்கு மாற்றும் வாய்ப்பை உங்களுக்கு அளிக்கும் . நீங்கள் உங்கள் உடலை விருப்பம்போல திருப்பலாம் .

தசையை அசைத்து , முதுகை நிமிர்த்தி , முகவாயை மேல் நோக்கி தூக்கி இடுப்புக்கூட்டை ஒரு பக்கமாக சாய்த்து நடக்கவும் .

உட்காரும்போது , காலை உயரத்தூக்கி வைப்பதற்கு வசதியாக சிறிய நாற்காலியை பயன்படுத்தலாம். குனிந்து அல்லது வளைத்து பொருள்களை தூக்குவதை தவிருங்கள் . முன்னோக்கி வளைவது அல்லது சாய்வது உங்களுக்கு சமநிலையில்லாமல் செய்துவிடும் . நீங்கள் நேராக நிமிரும்போது உங்கள் முதுகு தசைக்கு சிரமாக இருக்கும் . குனிவது அவசியம் என்றால் , கால்களை அகலமாக வைத்து முதுகை நேராக்கி கால்களை மடக்கி உட்கார்ந்து , பொருளை பிடித்து பிறகு தூக்குவதுதான் நல்லது . தூக்கப்படும் பொருளை உங்கள் உடலுக்கு அருகில் இழுக்க வேண்டும் . நீங்கள் எழுந்திருக்க , தொடை மற்றும் கால் தசைகளை பயன்படுத்த வேண்டும் .

பலசரக்கு பொருள்கள் போன்று நிறைய பொருள்களை தூக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது , அந்த பளுவை இரண்டாக பிரித்து , இரண்டு கைகளிலும் தூக்கி செல்ல வேண்டும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here