Home Women Part பெண்கள்…. பிரச்சனைகள்….. தீர்வுகள்……

பெண்கள்…. பிரச்சனைகள்….. தீர்வுகள்……

219
0
SHARE

கேள்வி:
நான் கல்லூரி மாணவி. பூப்படைந்த நாள் முதல் தாய்மையடையும் நாள் வரை என்னைப்போன்ற பெண்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். விளக்கமாக கூறுங்கள் டாக்டர்?

பதில்:
நல்ல கேள்வி. ஆனால் இதைப்புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். புரிந்து கொண்டால், மாதவிலக்கு கருத்தரித்தல் பற்றிய அணைத்து விஷயங்களும் உங்களுக்கு எளிதாக விளங்கும்.
மாதவிலக்கு எவ்வாறு வருகிறது என்றால், பெண்ணின் சினைப்பையில் உள்ள பிரிமாரடியால் பாலிக்கிள் என்கிற கருவணுக்கூடுகள், மாதத்துக்கு ஒன்றாக முதிர்ச்சி அடைந்து, சினைப்பையில் மேற்பகுதிக்கு வருகின்றன. இந்தக் கூட்டில் இருந்து முதிர்ச்சி அடைந்து முட்டை ஒன்று விடுபடும். விடுபட்ட முட்டையைச் சுற்றி சில நுண்ணறைகள் சூழ்ந்துகொள்ளும். இவற்றுக்கு கோரோனா ரேடியேட்டா அல்லது விளிம்பு அறை என்று பெயர்.


முட்டையானது, கருப்பைக் குழையின் வெளிப்புறத் திறப்பு வழியாகச் சென்று காத்திருக்கும்போது, கருப்பைக் குழாய் அதை மெல்ல மெல்ல உள்ளிழுத்துக்கொள்கிறது. கருப்பைக் குழாயில் உள்ள சிலிகா என்ற கண்ணுக்குத் தெரியாத மயிரிழைகள், முட்டையைச் சுற்றியுள்ள நுண்ணறைகளை அப்புறப்படுத்தி முட்டையைக் கருப்பைக் குழாய்க்கு அனுப்புகின்றன. அங்கே செல்லும் முட்டை, உயிரணுவின் வருகைக்காக காத்திருக்கும். உயிரணு வந்தால் அதனோடு இணைந்து கருவுறுதலை உண்டாக்கும். இல்லாவிட்டால் இறந்துவிடும். ஆணுறுப்பு மூலமாக பெண்ணுறுப்புகுள் செலுத்தப்படும் உயிரணுக்கள் முட்டையோடு இணைந்து கருத்தரிப்பு நிகழ்கிறது.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here