Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 40

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 40

    321
    0
    SHARE

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும்

    ஐ.டி. துறையை பொறுத்தவரை ஊழியர்கள்தான் பெரிய சொத்து. எங்கே அதிக சம்பளம் கிடைக்கிறதோ அந்த இடத்தை நோக்கி அவர்கள் பறந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் ,ஊழியர்கள் நலனில் அக்கறை காட்டும் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது என்றால் ஒன்றுக்கு பல முறை யோசிக்கவே செய்வார்கள் . பெற்றோர் மற்றும் உறவினர்களும் நிறுவனத்துக்கு அறிமுகமானவர்ள் என்பதால் , அவர்களும் தங்கள் பிள்ளை வேலை மாறுவதற்கு ஆதரவு தரமாட்டார்கள் . ஊழியர்களின் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள நிறுவனங்கள் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை .

    ஏனென்றால், இதையெல்லாம் கவனித்து கொள்ள ஒரே ஒரு நபரை மட்டும் நியமித்தாலே போதுமானது . அவர் பணியின் மூலம் அலுவலகமே ஊழியர் நலனில் அக்கறை காட்டுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட முடியும் . நிறுவனம் காட்டும் அக்கறையால் ஊழியர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து லாபத்தை ஈட்டி தருவார்கள் .

    ஊழியரக்ளுக்கு தேவையான நல்ல சிறப்பான சுற்றுப்புறத்தை உருவாக்கி தர வேண்டியது அலுவலகத்தின் கடமை . கீழே ஏதாவது உணவு பொருள் விழுந்துவிட்டால் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் , எந்த வாசனையும் இல்லாதபடி பராமரிப்பதும் அவசியமாகும் . அமர்ந்து சாப்பிடும் இடம் என்பது மனதுக்கு ரம்யமாக இருக்க வேண்டும் . அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிரித்த முகத்துடன் வேலை செய்பவராக , பணியில் இருந்து வரும் ஊழியர்களின் டென்ஷன் குறைபவர்களாக இருக்க வேண்டும் .

    ஐ.டி ஊழியர்களிடம் உள்ள முக்கியமான பிரச்சனை . அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் . குளிர்சாதன அறையில் இருப்பதால் வியர்வை அதிகம் வெளியேற வழியின்றி தாகம் அவ்வளவாக எடுப்பதில்லை. சாதரணமாக ஒரு நபர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டியது உடலுக்கு மிகவும் அவசியம் . ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டா தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here