Home Common Health Problems ஐ . டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 41

    ஐ . டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 41

    557
    0
    SHARE
    619-06774815 © Masterfile Royalty-Free Model Release: Yes Property Release: No Businessman relaxing at desk in office

    ஐ . டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 41


    ண்டிப்பாக வேலை செய்யும் நபருக்கும் வேலை வாங்கும் நிர்வாகிகள் எதிர்பார்ப்புக்கும் அதிகபட்ச வேறுபாடு இருப்பது நிச்சயம் மனதை பாதிக்கவே செய்யும் . ஏதாவது ஒரு ஒரு காரணத்தால் மட்டுமே மனநலம பாதிக்கப்படும் என்று சொல்ல முடியாது . பல்வேறு காரணங்கள் சேர்ந்து டென்சன் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்படலாம் .

    ஊழியர்களிடம் இருந்து அதிக உழைப்பை எதிர்பார்க்கும் நிர்வாகி , குறிப்பிட்ட நேரத்துக்குள் புராஜெக்ட்டை சமர்பித்தே தீர வேண்டும் என்று கட்டளையிடுவதுண்டு. அக்கட்டளை மூலம் தன்னுடைய தோளில் பெரிய சுமை ஏறியிருப்பதை ஊழியரால் உணர முடியும் .. இதனை தன்னால் முடிக்க முடியுமா என்ற பயம் , டென்சன் , கோபம் , தாழ்வு மனப்பான்மை , அவசரம்,ஆத்திரம் எல்லாம் சேரும்போது ஊழியரின் மனம் தடுமாறி போய்விடுகிறது . இதனால் , உடல்நலம் குன்றி காய்ச்சல் மற்றும் பதற்ற நோய்கள் ஏற்படுவது மட்டுமின்றி , சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகவும் மாறிவிடலாம் .

    வேலை தவிரவும் மதுப்பழக்கம் , அலுவலகத்தில் நிலவும் பாலிடிக்ஸ் , ஊழியர்களுக்கிடையே இருக்கும் முரண்பட்ட சம்பளம் , பணியிடதின் அமைப்பில் இருக்கும் குறைபாடு என்று மேலும் எத்தனையோ காரணங்களால் மனநலம பாதிக்கப்படலாம் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here