Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 73

கரு முதல் குழந்தை வரை – பாகம் 73

733
0
SHARE

கரு முதல் குழந்தை வரை

பொதுவாக பெண் முப்பத்தைந்து வயதை அடையும்போது கர்ப்பிணியாக இருக்க நேரிட்டால் மார்பகங்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைவது இயல்பு . உடல் பருமன் அதிகளவில் இருந்தால் இவ்வாறு பெரிய மார்பகங்கள் தோன்றும் .ம் இதனால் எந்த பிரச்சனையும் வந்துவிடாது என்றாலும், அவ்வப்போது முதுகுவலி , மார்பகங்கள் குலுங்க நேர்ந்தால் தோள்பட்டை வலி போன்றவை அவ்வப்போது வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன .
>

காலத்தில் பொதுவாக மார்பகங்களில் வளர்ச்சி ஏற்படும் . அவ்வாறு ஏற்படவில்லை என்றால் மார்பகத்தில் கொழுப்புகள் சரியாக படியவில்லை என்று பொருள் . இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது . சிகிச்சைகளும் தேவையில்லை . ஊட்டச்சத்துணவு சாப்பிட்டால் தானாக மார்பக வளர்ச்சி ஏற்படும் . தவிர , இயல்பான அளவு உள்ள மார்பகங்களே குழந்தைக்கு பாலூட்ட போதுமானவை .
கர்ப்ப காலத்தில் மார்பக வலியெல்லாம் இயல்பானது . ஹார்மோன்கள் தூண்டுதல் மற்றும் பால் சுரப்பி மடிகள் பெரிதாவது , ரத்த நாளங்கள் அளவில் பெரிதாகி அதிக ரத்த ஓட்டம் ஏற்படுவது போன்றவை காரணமாக இந்த வலி ஏற்படுவது உண்டு . தளர்த்தியான ஜாக்கட் அணியுங்கள் . பிரசவத்துக்கு பிறகு இந்த வலிகள் சரியாகி விடும் . கவலையை விடுங்கள் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here