Home Love Part காதல் விதிகள் – பாகம் 7

காதல் விதிகள் – பாகம் 7

234
0
SHARE

காதல் விதிகள்

நீங்களாகவே இருங்கள்

நீங்கள் உருவாக்கிய பொய் தோற்றத்தின் பின்னால் உங்களால் வாழ்நாளெல்லாம் ஒளிந்து கொள்ள முடியுமா ? அது எவ்வளவு இம்சையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள் . உங்கள் மதிப்பை இழந்துவிடும் பயத்தில் இந்த தோற்றத்தை நீங்கள் துறக்கவே மாட்டீர்கள் . மேலும் அவர்கள் ஒரு சில வாரங்களிலோ அல்லது மதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ உங்கள் பொய்த்தோற்றத்தை கண்டுபிடித்துவிட்டால் , என்ன செய்ய போகிறீர்கள் ? அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைய போவதில்லை . அல்லது இது நாள் வரை உங்கள் காதலர்தான் இந்த பொய்த்தோற்றத்தை போட்டுகொண்டு இருந்தார் என்று உங்களுக்கு தெரியும்போது , நீங்களும் மகிழ்ச்சி அடைய போவதில்லை.

அதற்காக நீங்கள் மாறவே கூடாதா மாறலாம் . ஒவ்வொரு இதழாக மாற வேண்டும் . கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற வேண்டும் . நாமெல்லோரும் அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறோம் . இதை காதலில் மட்டும் செய்வதில்லை . வாழ்விலும் செய்கிறோம் . நீங்கள் இன்னும் கொஞ்சம் ஒழுங்குடன் இருக்க பழகலாம் , அல்லது நடத்தைகளை மாற்றி கொள்வது மிகவும் நல்லது . இந்த விதி , உங்கள் அடிப்படை ஆளுமையை மாற்றி கொள்வது பற்றி பேசுகிறது . அப்படி மாற்றிக்கொள்ள முடியாது . அதை செய்ய முயற்சித்தீர்கள் என்றால் , வீணான சிக்கல்களே மிஞ்சும் .

அதனால் நீங்கள் நீங்களாகவே இருங்கள் . இப்போதே எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள் . இந்த குணங்களை உங்கள் காதலர் விரும்பவில்லை என்றால், பரவாயில்லை நல்லதாயிற்று. அவர்களாகவே கண்டுபிடித்து வெறுப்பதற்கு முன்னால் , நீங்களே விலகிவிடலாம் . இன்னொரு விஷயம் தெரியுமா ? அவர்களுக்கு நேர்த்தியானவர் பிடிக்காமல் இருக்கலாம். அதே போல் வலிமையான அமைதியாக டைப் ஆள்களை அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் . உங்களுடைய நேரடியான நகைசுவை உணர்வை அவர்கள் ரசிக்கலாம் . தங்களை கவனித்துக்கொள்ள ஒருவர் தேவை என்று நினைப்பவரை அவர்கள் தேடலாம் .

மேலும் நீங்கள் பொய் தோற்றம் போட்டுக்கொண்டால் , நீங்கள் கவர கூடியவர் முற்றிலும் வேறு நபராக இருப்பார் இல்லையா ? அது எப்படி உங்களுக்கு உதவ முடியும் ? சொல்ல போனால், உங்களை போல் ஒருவரை எல்லா குற்றங் குறைகளோடும் சேர்ந்த ஒருவரை , வெளி உலகத்தில் யாரோ ஒருவர் தேடி கொண்டு இருப்பார்கள் .எ அவர்கள் உங்கள் குற்றங் குறைகளை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள மாட்டார்கள் .அது உங்களுடைய அழகின் ஒரு பகுதியாக நினைப்பார்கள் . அவர்கள் செய்வது சரிதானே .


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here