Home Women Part பெண்கள், பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் :

பெண்கள், பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் :

490
0
SHARE

கேள்வி :

நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். இருவரும் வெவ்வேறு மாநிலத்தையும், வெவ்வேறு மதத்தையும் சேர்ந்தவர்கள். அதனால் இரு குடும்பத்திலும் கடும் எதிர்ப்பை சம்பாதித்தோம். இரு குடும்பத்தாரும் எங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, குழந்தை பெற்றால் போதும் என்று முடிவு செய்து, நான்கு வருடங்கள் காத்திருந்தோம். கடவுள் அருளால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் அடங்கிவிட்டன. இரு தரப்பில் இருந்தும் எங்களிடம் அன்பு பாராட்டுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி விட்டோம். இதற்காக நங்கள் எப்படி திட்டமிட வேண்டும்? எப்படி செயல்பட வேண்டும் என்பதைக் கூறுங்கள்?

பதில் :

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் நீங்கள், ஒரு மகளிர் நல மருத்துவரை அணுகுவதுதான் முதல் காரியமாக இருக்க வேண்டும். அவரிடம் சென்று, டாக்டர், எனக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகின்றன.

இப்போது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் . அதற்கான சூழல் உள்ளதா ? எனது உடல்நிலை குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு உள்ளதா? என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அவசியமான ஆலோசனைக்கு பிறகு உங்கள் கருத்தரிப்பு மிகச் சிறப்பாக அமையும்.

கணவன் மனைவி இருவரிடமும் டாக்டர் பல கேள்விகளைக் கேட்டு, அதன் மூலம் தாம் கண்டறிந்த விஷயங்களை விளக்கி குழந்தை பெறுவதற்கான சிறந்த வழிகளைத் தெரிவிப்பார்.

உங்கள் குடும்பத்தில் திருமணம் ஆன அனைவரும் தாமதம் இல்லாமல் குழந்தை பெற்றார்களா? யாருக்கேனும் பரம்பரையாக பிரச்சினைகள் இருந்தனவா? கணவர் வழியில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா? என்பதில் தொடங்கி உங்களுக்கு சிறு வயது முதல் இதுவரை எந்தெந்த விதமான நோய்கள் வந்திருக்கின்றன? என்னென்ன சிகிச்சைகள் மேற்கொண்டீர்கள்? ஏதேனும் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறீர்களா? நிறுத்தியிருந்தால் எவ்வளவு நாட்களாய் நிறுத்தியிருக்கிறீர்கள்? அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? எந்த இடத்தில பணி செய்கிறீர்கள்? அந்த இடத்தில் மாசுக்கள், ரசாயனங்கள் போன்றவற்றின் பாதிப்புகள் இருக்கின்றனவா? மாதவிலக்கு சரியாக வருகிறதா? இப்படி பல விஷயங்களைக் கேட்டு அதற்கேற்ப உங்கள் கருவாக்க திட்டத்தை டாக்டர் உருவாக்குவார்.

இதேபோல் பல கேள்விகளை உங்கள் கணவரிடமும் கேட்பார். காரணம் , மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களுக்கும், நீங்கள் கருத்தரிப்பதற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

அடுத்து கருத்தரிப்பற்கு ஏற்ப இனப்பெருக்க உறுப்புக்கள் முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். கருப்பை திறனுள்ளதாக இருக்க வேண்டும். அதே சமயம், பெண்ணுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகியிருந்தால், கருப்பையின் திறன் குறைந்துவிட்டிருக்கும். அதனால் கருமுட்டை வெளிப்படுவதும் குறையும். நாற்பத்தைந்து வயதுக்குமேல் மாதவிலக்கு நின்றுவிடும்.நிலை இருப்பதால் கருவுறும் வாய்ப்பே முடிவுக்கு வந்து விடும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here