Home Love Part காதல் விதிகள் – பாகம் 8

காதல் விதிகள் – பாகம் 8

266
0
SHARE
beautiful young couple sitting on a sofa

காதல் விதிகள்

பழையன களைந்து புதியன ஏற்க

என் தோழி ஒருத்தி, ஒரு உறவில் இருந்து மீண்டு வந்தால் , உணர்வு ரீதியாக உடைந்து போயிருந்தாள், வேதனை . மீண்டும் அவள் தன் மனம் விரும்பும் ஒருவனை சந்தித்தாள். அன்பு கவனிப்பு பாதுகாப்பு ஆகியவற்றை தருபவனாக புதியவன் இருந்தான். அவள் என்ன எதிர்பார்த்தாளோ , அது அவனிடம் இருந்தது . அடுத்த இரண்டு ஆண்டுகள் அவன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினாள் . அவள் , இன்னும் உறுதியானவளாக சுதந்திரமானவளாக மாறினால் . ஆனால், என்ன ஆயிற்று தெரியுமா ? அது அவர்களுடைய உறவையே சீரழித்தது . இப்படி மாறிவிட்ட பெண்ணை , அவன் எதிர்பார்க்கவில்லை. பல ஆண்கள் உறுதியான சுதந்திர எண்ணம் பெண்களை விரும்புவார்கள் . ஆனால் இவனோ அப்படிநினைப்பவன் அல்ல . இவனுக்கு தளர்ச்சியான ஆதரவு கோரும் பெண் தான் பிடிக்குமாம்.

இதில் இருக்கும் பிரச்சனை இதுதான் . நீங்கள் உண்மையிலேயே உங்கள் மனத்துக்கு பிடித்தவரை கண்டுபிடித்துவிட்டாலும் அவர் இப்போதைய உங்களுடைய மன நிலைக்கு பொருத்தமானவராக இருப்பாரே அன்றி , நாளை நீங்கள் உங்கள் துக்கத்தில் இருந்து மீண்ட பிறகு இருக்கும் மன நிலைக்கு பொருத்தமானவராக இருக்க மாட்டார் . உங்களுடைய உண்மையான எதிர்பார்ப்புகள் உள்ளே புதைந்து கிடைக்கிறது . இதுபோன்ற நிலையில் உருவாகும் உறவுகள் நீடிக்கவே நீடிக்காது என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் அபூர்வமான ஒன்றாகத்தான் இருக்க முடியும் .

அதனால் ,இப்படி செய்யுங்கள் , உங்கள் வலி வேதனை ஆகியவற்றை ஆற்றிக்கொள்ளும்போது , எங்காவது மறைந்து இருங்கள் . நணப்ர்களோடும் குடும்பத்தினரோடும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள் . உங்கள் துக்கம் தீரட்டும் . அப்புறம் புதிய காதலரை தேடலாம் . அப்படி தேடி கண்டுபிடிக்கும் நபரும் இதுபோன்ற வலியில் இருந்து ஓரளவுக்கு முழுமையாக மீண்டவராக தேடுங்கள் . ஏனெனில் , அவர் உங்கள் வலியை புரிந்து கொண்டு , நீங்கள் மீண்டு வர உதவ கூடியவராக இருக்க கூடும் . இதன் மூலம் , நீங்கள் மீண்டு வர உதவ கூடியவராக இருக்க கூடும் . இதன் மூலம் நீங்கள் ஒருவரை ஒருவர் உண்மையாக பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் விரும்பும் விதத்தில் உறவை மீண்டும் தொடரவும் முடியும் .

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here