Home Common Health Problems சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 122

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 122

    530
    0
    SHARE

    மாத்திரைகள் எதுவும் பலனளிக்காத நிலையில் அடுத்தகட்ட சிகிச்சைக்கான ஆயத்தம் :

    மாத்திரைகள் பலனளிக்காத நிலையில் உங்கள் பாலுறவு, பழக்க வழக்கத்தின் அடிப்படையில், டாக்டர் சிகிச்சையை தேர்வு செய்வார். உதாரணத்திற்கு இயல்பான முறையில் நீங்கள் பாலுறவு கொள்வதற்கு விரும்பலாம். அல்லது திட்டமிட்டு பாலுறவு கொள்ள நினைக்கலாம். அதற்கேற்ப சிகிச்சைகள் மாறுபடும்.

    செயற்கை சாதனங்கள் :

    அறுவை சிகிச்சை முறைகள் நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு பொருந்தி வராது . அறுவை சிகிச்சை காயங்கள் ஆறாவிட்டால், உறுப்பு அழுகும் நிலையும், தொடர்ந்து உறுப்பு நீக்க சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட வாய்ப்பு நிறைய உண்டு. இதை தவிர்ப்பதற்காக வாக்யூம் சக்சன், ரப்பர் வளையங்கள் போன்ற பல்வேறு கருவிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனைப்படி பெற்றுக் கொள்ளலாம்.

    சில சந்தேகங்களும், சில விளக்கங்களும் :

    கேள்வி :
    இரத்தக் கொதிப்புள்ளவர்கள் வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா?

    பதில் :
    கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது; நெஞ்சு வலிக்காக நைட்ரேட் மாத்திரைகள் எடுத்துக் கொள்வோரும், இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள ஆல்பா ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவோரும் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    மிகை இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத போதும், குறை இரத்த அழுத்தம் சரியான நிலைக்கு வராத போதும், கடந்த ஆறு மாதத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வந்தவர்களும், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயாளிகளும், ரெடினிடிஸ் பிக்மென்டோசா என்ற கண் பாதிப்பு உள்ளவர்களும் இந்த மாத்திரைகளை தவிர்க்க வேண்டும்.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here