Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 123

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 123

294
0
SHARE

நீங்கள் தினமும் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகிரெட் புகைக்கிறீர்கள் . அல்லது தினமும் இரவில் அதிகமாக மது அருந்துகிறீர்கள் . இதனால் உங்களுக்கு சில வேளைகளில் விரைப்புத் தன்மை ஏற்படுவது பாதிக்கப்படுகிறது .
இப்படிப்பட்ட நிலையில், குறைந்து அளவு மது செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் . ஆனால் அதிகப்படியான மது அருந்துவது செக்ஸ் உறவை பாதித்துவிடும். புகைப்பழக்கம் இரத்த நாளங்களை சிதைத்துவிடுவதால் விரைப்புத் தன்மை ஏற்படாது என்பதையயெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பின்லாந்தில் 1999-ல் நடத்தப்பட்ட ஆராயச்சிலேயே மது மற்றும் புகைப்பழக்கத்தால் பலருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டிருப்பது கண்டுடிக்கப்பட்டது. இப்பழங்களை கைவிட்டால் பத்திப்பையும் நீக்கிவிடலாம்.

சர்க்கரை வியாதி இருக்கிறது. நான் எவ்வாறு மருத்துவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்?
அங்கு அவர் என்னென்ன கேள்விகளையெல்லாம் கேட்பர் என்பது விவரங்கள் இவற்றைப் பற்றிய விளக்கங்கள் தெரியவில்லை.
உங்களுக்கு சர்க்கரை வியாதியும், விரைப்புத் தன்மை இல்லாத நிலையும் இருக்குமானால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது தகுதியான மருத்துவரைப் பார்ப்பதுதான். தனது அந்தரங்க விஷயத்தை மருத்துவரிடம் ஆலோசிப்பதற்கு துவக்கத்தில் தயக்கம் இருக்கத்தான் செய்யும்.இதில் தவறு ஏதும் இல்லை.மருத்துவர் உங்கள் நலம் நாடுகிற அதே நேரத்தில் உங்கள் அந்தரங்க வாழக்கையில் தலையிடாது நண்பர் .அவரிடம் உங்கள் பிரச்சினைகளை மறைக்காமல் கூறும் போதுதான் உங்களுக்கு எவ்விதத்தில் உதவ முடியும் என்பதை அவரால் தீர்மானிக்க இயலும்.

சர்க்கரை வியாதியுள்ளவர்களில் சுமார் 35 முதல் 75 விழுக்காட்டினர்வரை விரைப்புத் தன்மை இல்லாதவர்கள் என்ற அதிர்ச்சியான உண்மையை நீங்கள் தெரிந்துகொண்டால் , சர்க்கரை நோயாளிகளிடம் விரைப்புத் தன்மைக் குறைபாடு பரவலாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.உங்களுடைய நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் உங்களால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலும் .

உங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு உங்களிடமிருந்து விரிவான தகவல்கள் அவருக்குபத் தேவைப்படும் இதே மருத்துவரிடம் நீங்கள் சர்க்கரை வியாதிக்காக ஏற்கவே சிகிச்சை எடுத்திருந்தால், அந்த நோயை எவ்வளவு தூரத்திற்கு நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறர்கள் என்ற விவரம் மருத்துவருக்குத் தெரிந்திருக்கும் . மருந்து மாத்திரைகளை எவ்வாறு எடுத்துக் கொள்ள்கிறீர்கள் , இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறீர்களா , இல்லையா ? மருத்துவர் சொல்லும் விழிமுறைகளை எவ்வாறு பின்பற்றுகிறீர்கள் என்பதையெல்லாம் அவர் அறிந்து வைத்திருப்பார் .

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here