Home Common Health Problems பார்வை குறைவால் அணியும் கண்ணாடிகளால் ஏற்படும் பிரச்சனைகள்

    பார்வை குறைவால் அணியும் கண்ணாடிகளால் ஏற்படும் பிரச்சனைகள்

    510
    0
    SHARE

    பார்வை குறைவால் அணியும் கண்ணாடிகளால் ஏற்படும் பிரச்சனைகள்

    40 வயதை நெருங்கும்போது பலருக்கும் பார்வைக் குறைவு ஏற்படுகிறது. அருகில் உள்ள பொருள்களை முன் பார்த்ததுபோல தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் படிக்கும் போது தானாகவே அவற்றை தூரமாக வைத்து படிப்பது போன்ற பழக்கம். இதனை விழிலென்ஸ் திறனிழப்பு என அழைப்பர்.

    விழி ஆடி தடித்து, எளிதில் சுருங்கி விரிய இயலாமல் போவதால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை. கண்களுக்குச் சிரமம் உள்ளதெனக் காட்டும் மற்ற அறிகுறிகள் தலைவலி, கண் சிவத்தல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

    உங்களுக்கு ஏற்கனவே தூரப்பார்வை இருந்தால் இம்மாற்றங்கள் சீக்கிரமாகவே ஏற்படும். எனவேஉங்களுக்கு நல்ல கண்ணாடிகள் தேவைப்படுகிறது. உங்களுக்குக் கிட்டப்பார்வை இருந்தால் நீங்கள்ஏற்கனவே அணிந்திருந்த கண்ணாடியை கழற்றிவிட்டு தான் செய்தித்தாள்களை படிக்க இயலும். ஆனால் இவ்வாறு படிக்கும் போது படித்ததற்கு பிறகு கண்கள் மிகவும் சோர்வடையும்.

    இதற்கான கண்ணாடியை அணியும்போது மருத்துவரை கலந்தாலோசித்து அணிவது நல்லது.

    உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் முதலில் கண் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைசெய்த பிறகே கண்ணாடி தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே கண்ணாடியை தேர்தெடுக்கவும். பார்வையில் மாறுபாடுகள், நிற மாறுபாடுகள், ஒளிக்கூச்சம் போன்ற அறிகுறிகள் கண்களில் குறைகள்உள்ளதை காட்டும்.

    பார்வை திறன் குறைந்தவர்களுக்கான பயண அறிவுரைகள்

    தேவையான அளவு பார்வை இல்லாவிடில் வாகனங்களை ஓட்ட முயலவண்டாம்.

    முக்கியமாக இரவு நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளபோதும், மோசமானவானிலை உள்ளபோதும் வாகனங்களை ஓட்ட வேண்டாம்.

    சரியான கண்ணாடி அணிந்து பார்வையைச் சரிசெய்யுங்கள். கண்ணாடியை எப்போதும் கைவசம்வைத்துக்கொள்ளுங்கள்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here