Home Common Health Problems ஐ. டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 49

    ஐ. டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 49

    328
    0
    SHARE

    வேலைக்கான உத்தரவாதம்

    இன்று ஐ.டி ஊழியர்கள் எவருக்குமே வேலைக்கான உத்தரவாதம் கிடையாது . வேலை கிடைப்பது இன்றைக்கு மிக எளிதாக இருக்கிறது . கேட்கும் சம்பளமும் கிடைக்கிறது. ஆனால் இதே நிலைமை இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பதை தெளிவாக எடுத்துச்சொல்ல யாராலும் இயலாது . ஆனாலும் ஊழியர்கள் மனதில் இப்பொது பார்க்கும் வேலை இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் நிற ஐயம் இருந்துகொண்டே இருக்கும் .

    தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையும் , இந்த நிர்வாகமும் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதை ஊழியர்களுக்கு புரியவைக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு . ஓவர் பெரிய புராஜெக்டை முடித்தவுடன் , வேறு எந்த வேலையும் கொடுக்காமல் ஊழியர்களை சில நாள்கள் ஓய்வாக இருக்க அனுமதிப்பார்கள் . அது உண்மையில் அனுமதிக்கப்படும் ஓய்வா அல்லது வேறு புராஜெக்ட் எதுவும் கிடைக்கமால் நிர்வாகம் சிரமப்பட்டு கொண்டிருக்கிறதா என்று ஊழியர்கள் மனத்தில் சந்தேகம் வரும் முன்னர் , அதனை நிர்வாகம் தீர்த்துவைக்க வேண்டும் . இந்த வேலையில் சிக்கல் இல்லை என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஊழியர்களால் சிரிக்கவே முடியும் . இல்லையென்றால் , வேலை தொடர்பான பாதுகாப்பற்ற தன்மையால் , மனப்பிரமை பிடித்ததுபோல் திரிய தொடங்கிவிடுவார்கள் .

    எதிர்கால நம்பிக்கை
    இன்றைய பணி சிறப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஐ. டி துறையின் எதிர்காலம் பற்றி யாருக்கும் தெளிவாக தெரியவில்லை . ஐ. டி துறை இன்னும் விரிவடைய வேண்டியிருப்பதால் , அடுத்த ஐம்பது ஆண்டு காலத்துக்கு வேலைக்கு குறைவிருக்காது . இப்போதுள்ள நிலையைவிட ஐ.டி -க்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது போன்ற தகவல்கள் எல்லாம் ஊழியர்களுக்கு தெரிய வேண்டும் .

    ஒரு வேளை , எதிர்காலம் சிக்கலாக இருக்கும் என்றாலும் அதற்கு எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவும் இருந்தால் ஊழியர்கள் தங்கள் வாழ்நாள் பற்றிய பயமின்றி இருப்பார்கள் . எதுவும் புரியாமல் தெரியாமல் வாழ்பவர்கள் இன்றைய சந்தோஷத்தைவிட்டு எதிர்கால பயத்திலேயே வாழ்ந்து மன நோயாளி ஆகிவிடுவார்கள் .


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here