Home Love Part காதல் விதிகள் – பாகம் 11

காதல் விதிகள் – பாகம் 11

259
0
SHARE

ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு முடிவெடுங்கள்

beautiful young couple sitting on a sofa

சந்தித்த முதல் சில மாதங்களில் , உங்கள் காதலர் சுயநலவாதியா , ஆதிக்கம் செலுத்துபவரா, உங்கள் தோழியரிடம் மோசமாக நடந்து கொள்பவரா , நீங்கள் விரும்பும் பல விஷயங்களை வெறுப்பவரா , உங்கள் பழக்கங்களை ஏற்க மறுப்பவரா அல்லது குடிகாரரா , அல்லது வசைமழை பொழிப்பவரா என்று தெரிந்து கொள்ள முடியாது ( அதையெல்லாம் மாற்றவும் முடியாது ) இதில் ஒரு சில விஷயங்களை நீங்கள் சகித்து கொள்ள முடியும் , சில வற்றை சகித்து கொள்ள முடியாது. ஆனால் இதை நீங்கள் அவரோடு பழகாமல் கொள்ளாமல் தெரிந்துகொள்ள முடியாது .

சேர்ந்து வாழவோ , திருமணம் செய்துகொள்ளவோ , குழந்தைகள் பெற்றுக்கொள்ளவோ , வேற்று நாட்டுக்கு பயரவோ , அல்லது வேறு ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கவோ செய்வதற்கு முன்பு உங்கள் காதலரை ஓராண்டு வரை காத்திருக்க சொல்வது சரியாக இருக்கும் . உங்களுடைய அருமை காதலர் ஒரு சில மாதங்களிலேயே ஏதேனும் அழுத்தம் கொடுக்க
தொடங்கினால் , தெளிவாக இந்த விதியை சொல்லுங்கள் . உங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொண்ட பின்னரே , எந்த முடிவையும் எடுக்க முடியும் .

ஒரு சில காதலர்கள் மூன்று ஆண்டுகள் நான்கு ஆண்டுகள் ஆன் பின்னரும் உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறுவதை , தள்ளிபோடுவதை பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் வேறு நிலைமை குறைந்தபட்சம் 12 மாதங்கள் காத்திருக்க சொல்வது நியாயமானது , புத்திசாலித்தனமானது . அதை மென்மையாக நீங்கள் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு .

நீங்கள் தேர்ந்தெடுத்த காதலர் , கூட சேர்ந்து வாழ அற்புதமானவராக இருப்பார் என்று தோன்றினால் , அதற்காக 12 மாதங்கள் காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லை . நீட வாழ்க்கையில் ஓராண்டு என்பது எவ்வளவு சிறியது ? எதற்கு அவசரப்பட வேண்டும் ? கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ரசித்து அனுபவித்து விட்டு , அப்புறம் வாழ்க்கை உங்கள் மேல் கொண்டு வந்து கொட்டக்கூடிய அத்தனை பொறுப்புகளையும் சுமக்கலாமே


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here