Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 130

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 130

163
0
SHARE

னஇறுக்கம் எவ்வாறு செக்ஸ் குறையை உண்டாக்குகிறது?

மன இறுக்கம் போன்ற சூழல்களில் பாலுறவு சாராத விஷயங்களில் அதிகமான கவனம் செலுத்தப்படுவதால் வேட்கை குறைந்து விரைப்புத்தன்மை ஏற்படுவதில்லை. மன இறுக்கத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது விரும்பினாலும் கூட விரைப்புத் தன்மை ஏற்படாமல் போகிறது.

பாலுறவு விஷயத்தில் இயலாமை ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம், தாழ்வு மனப்பான்மை, கட்டுப்பாட்டை இழந்து விட்டோம் என்ற உணர்வு, தம்பதியருக்கிடையே நெருக்கம் இல்லாமை, அடிக்கடி தோன்றுகிற கோபம் போன்றவை பாலுறவு வேட்கையை பி[பாதிக்கிறது. இவ்வாறே பாலுறவுக்கு ஒத்துக்கொள்ளாதபோது இயல்பாகவே பாலுறவு ஆற்றல் குறைய ஆரம்பித்துவிடுகிறது.

ஒருவரது உடலைப் பற்றி மற்றவர் அவதூறாகப் பேசும்போது பாலுறவு வெற்றி பெறுவது கிடையாது. இதனால்தான் கற்பழிக்க வருபவனைக் கூட கண்டபடி கெட்ட வார்த்தைகளில் திட்டவேண்டுமென்று பாலியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.. இவ்வாறு திட்டும்போது காமுகர்களுக்கு கோபம்தான் வருமே தவிர, ஆண்மை எழுச்சி அடைவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நேரங்களிலேயே இப்படியென்றால் சர்க்கரை வியாதியின்போது ஏற்படும் பாதிப்புகளைக் கேட்கவும் வேண்டுமா!

சர்க்கரை வியாதி கட்டுப்படுத்தப்படாத நிலையில் விரைப்புத் தன்மை ஏற்படாமலும், பாலுறவில் முழுமையாக ஈடுபட இயலாமலும் விரக்தி ஏற்பட்டுவிடுவதுண்டு. பெண்ணாக இருந்தாலும் பாலுறவு கொள்ள விரும்பினாலும் உறுப்பு இளகிக்கொடுக்காது.

இத்தகைய பிரச்சனைகள் இருந்தால் முதலில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு உளவியல் மருத்துவ நிபுணரை அணுகி மன இறுக்கத்தைப் போக்கும் வழிகளையும், பாலியல் மருத்துவ நிபுணர் அணுகி பாலியல் குறைகளைக்களையும் வழிகளையும் கேட்டறியுங்கள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here