Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 52

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 52

    254
    0
    SHARE

    உடல் ரீதியான பாதிப்புகள்

    மனநல கோளாறுகளுக்கான அறிகுறிகளை உடல் அவ்வப்போது வெளிப்படுத்தும் என்றாலும் அவை எப்போதும் நிரந்தரமாக இருக்காது . திடீரென வந்து , உடனே போய்விடும் என்பதால் யாரும் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் . அந்த அறிகுறிகள் எவையென்று பார்க்கலாமா ?

    பற்களை கடித்தல் , திடீர் நெஞ்சடைப்பு , அடிக்கடி காய்ச்சல் , பசி எடுக்காமை , தாடை ஒட்டிக்கொள்ளுதல், உயர் ரத்த அழுத்தம் , மூச்சு திணறல் , தசைப்பிடிப்பு , வலிகள் , அடிக்கடி மலம் கழித்தல் இவை எல்லாம் சாதாரண பிரச்சனைபோல் தோன்றி மறைந்து விடலாம் . ஆனால் , எவ்விதமான காரணமும் இன்றி அறிகுறிகள் தோன்றினால் , மனநல கோளாறுதான் அதற்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது .

    மனரீதியான பாதிப்புகள்

    எவ்வித காரணமும் இன்றி கவலை உண்டாதல் , உதவி செய்ய யாருமில்லை என்ற எண்ணம், சிந்திக்க முடியாமை , எதிலும் நம்பிக்கையின்மை , சிறிய விஷயங்களுக்கும் கோபம் வருதல் , சாதாரண விஷயங்களுக்கும் அதிகமாக ரியாக்ட் செய்வது , எப்போதும் சோர்வாக இருத்தல் , எதிர்மறையான எண்ணம் தோன்றுதல் , தற்கொலை சம்பந்தமான செய்திகளை ஆர்வமாக படித்தல், கேட்டல் , இவை எல்லாமே மிக சாதாரண விஷயம் போன்றே தோன்றினாலும் , உடனடியாக கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும் . இபப்டிப்பட்ட எண்ணங்கள் தொடர்ச்சியாக தோன்றும்பட்சத்தில் , உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி கூச்சமின்றி பேசினாலே மண் போராட்டத்துக்கு விடுதலை கிடைத்துவிடும் .


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here