Home Common Health Problems ஐ.டி .துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 51

    ஐ.டி .துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 51

    195
    0
    SHARE

    ஆண் – பெண் ஊழியர்கள் குழப்பங்கள்

    இரவு – பகல் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் ஆண், பெண் ஊழியர்கள் இருவரும் சேர்ந்தே பணிபுரிய வேண்டிய நிலைமை ஐ.டி . தொழிலில் இருக்கிறது . இதில் எந்த பாகுபாடும் பார்க்க வழியில்லை . விலகி செல்ல வழி இல்லை என்பதால் காதல் கெமிஸ்ட்ரி அதிக அளவில் ஒர்க்-அவுட் ஆக வாய்ப்புள்ளது .

    திருமணம் முடித்தவர் , முடிக்காதவர் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தவறான உறவுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு . காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் கலாசாரம் , சர்வ சாதாரணமாக மீறப்படுவது பலருக்கும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுக்கும் . இந்த சுதந்திரத்தை நாமும் அனுபவிக்கலாம் , கூடாதா என்றும் பலர் குழம்புவார்கள்.

    இக்குழப்பதால் வேலையில் கவனம் சிதறும் , எல்லைக்கோட்டை தாண்டவும் முடியாமல் , வேண்டாம் என ஒதுக்கவும் முடியாமல் பெரும் மனா போராட்டத்தில் மாட்டிக்கொள்வார்கள் .

    மிரட்டல்கள்

    வேலை பார்க்கும் இடத்தில் அதிகாரிகள் மற்றும் கேழே பணியாற்றுபவர்களுடன் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகவே செய்யும் . அதை அப்படியே விட்டுவிட்டால் எந்த சிக்கலும் வராது . ஆனால் , கோபத்தில் சிலர் தங்களையும் மீறி , கொலை செய்துவிடுவேன் , உன் குடும்பத்தை அழித்துவிடுவேன் என்று எதையாவது சொல்லி மிரட்டுவார்கள் . இது உண்மையில் நடக்கிறதோ இல்லையோ , மனதில் கடும் காயத்தை உண்டாக்கிவிடும் .

    வீட்டில் இந்த் விஷயத்தை சொல்லி முன்னெச்சரிக்கையாக இருக்க சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பமே ஒருவரை மன நோயாளி ஆக்கிவிடும் . இதற்காக மேலதிகாரிகளிடம் அல்லது போலீஸிடம் போனால் இன்னும் பெரிய சிக்கலாகிவிடும் என்று அஞ்சி பலர் இந்த மிரட்டல்களுக்கு பயத்தே காலம் கழிப்பார்கள் .

    முன் கூட்டியே சொல்லாமல் திடீரென்று ஒரு நிறுவனம் ஆள்குறைப்பு செய்யும்போதும் இத்தகைய மன பாதிப்புகள் ஏற்படும் . நிறுவனத்தின் மீதும் , தங்களின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு சாதாரண மீட்டிங் நடந்தால் கூட தங்களை வேலையை விட்டு அனுப்பப்போகிறார்கள் என்றே பயப்படுவார்கள்

    ஐ .டி . ஊழியர்களில் பெரும்பாலானோர் மேலே சொல்லப்பட்ட சிக்கல்களை தினமும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் . இந்த சிக்கல்கள் , தீவிரமான மன நோயாகவும் உருவெடுக்கக்கூடும். அப்படி உருவெடுக்காமல் தடுக்க வேண்டுமெனில் மன ரீதியான கோளாறுகளை அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டும் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here