Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 85

கரு முதல் குழந்தை வரை – பாகம் 85

214
0
SHARE

யிற்சிகளை மேற்கொள்ளும் முன்பு தசைகளின் நிலைகளை பற்றி தெளிவான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் . தசையானது இருக்கமாகவோ, தளர்த்தியாகவோ எப்படியிருந்தாலும் அந்த நிலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் திறன் பெற வேண்டும் .

பல்வேறு தசை பிரிவுகளை அடையாளம் காண தெரிந்துகொண்டால், அவற்றை விசையுள்ளதாக்கவோ அல்லது தளர்த்தவோ முடியும்.. ஒவ்வொரு தசை இருக்கத்தின்போதும் , தன்னிச்சையாகவே உடல் முழுவதையும் தளர்த்துவதற்கான திறனை நீங்கள் பெறுவதற்கு கடினமான பயிற்சி தேவை. கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால்தான் பிரசவ நேரத்தின்போது உங்கள் உடலை முற்றிலுமாக தளர்த்த இயலும் . இது கருப்பையின் தசையை எந்தவிதமான இடையூறுகளும் இன்றி அதிக திறனுடனும் , குறைந்த வலியுடனும் செய்லபடுவதற்கு அனுமதிக்கும்.

மன உறுதியோடு மனத்தை தளர்த்துவதற்கு கற்று கொள்வது கடினமான செயல் அல்ல . திடமான முயற்சியும், உறுதியான பயிற்சியும் அதில் நிபுணராவதற்கு தேவைப்படுகிறது. உடம்பை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற சுறுசுறுப்பான மன நிலையும், சிறப்பான ஒருநிலைப்படுத்தும் திறனும் அதற்கு தேவைப்படுகிறது .

உடலை தளர்த்துதலும் , சுவாசித்தலும் , நீங்கள் படுக்கும் நிலையும் கூட ஒரு வித்தியாசத்தை உண்டாக்கும் . சுற்றி சுற்றி நடந்து வருதல் அல்லது பின்னோக்கியும் முன்னோக்கியும் நடத்தல் , மசாஜ் செய்வதுகூட பயன் அளிக்கும் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here