Home Common Health Problems ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 54

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 54

    177
    0
    SHARE

    பணியிடம் மற்றும் வேலையில் ஏற்படும் பிரச்சனைகளால் அடிக்கடி தலைவலி மற்றும் ஜலதோஷம் பிடிப்பதாக உணர்ந்தால், உடனே வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் உணர்ந்த பிரச்சனைகளை மருத்துவரிடம் தெரிவித்தால் , அதற்கான மருந்துகளை கொடுப்பதுடன் வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லி தருவார். அடிக்கடி உடல்வலி ஏற்பட்டாலும் இதே வழிமுறையை பின்பற்றுங்கள் .

    அறிகுறிகள் சற்றே தீவிரமான நிலையை அடைந்தவர்களுக்கு நண்பர்கள் உறவினர்கள் என்று
    பார்த்தாலும் பேசுவதற்கு தயக்கம், அச்சம் இருக்கும், மீறி யாராவது பேசுவதற்கு முயற்சி செய்தால் கூட எப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்கலாம் என்று மனம் துடிக்கும் . கேட்கும் கேள்விகளுக்கு சின்ன சின்ன வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு ஓடுவார்கள் . மீறி எவராவது
    தடுத்து நிறுத்தி பேசினால் கோபம் கொப்பளிக்கும் .

    இந்த நிலையை அவர்களே சரிசெய்வது என்பது முடியாத காரியம் . ஏனெனில் தங்களை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதையே அவர்களின் நடத்தை உணர்த்துகிறது. இந்த மனநிலை மாற்றத்தை கவுன்சிலின் மூலம் மட்டுமே தீர்க்கமுடியும் என்பதால் , உடனே மருத்துவரை அணுகி விஷயத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here