Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 86

கரு முதல் குழந்தை வரை – பாகம் 86

267
0
SHARE

கருப்பை சுருக்கம் ஏற்பட்டு கொண்டிருக்கும்போதே முக்குவதை நிறுத்துமாறு மருத்துவர் கூறலாம் . நீங்கள் முக்குவதை நிறுத்திவிட்டு வேகமாக மூச்சை இழுத்து சுவாசிக்க தொடங்குங்கள் . இது உன்னால் உதரவிதானம் மேலும் கீழும் அசைவதற்கு உதவும் . இது , உடல்ரீதியாக முக்குவதில் இருந்தும் உங்களை தடுக்கும் . வாயாலும் காற்றை இழுத்து வேகமாக ஊதலாம்.

வலி நீக்குவதற்காக , அதிகமாக பெத்தடின் மற்றும் பெனர்கள் ஆகிய மருந்துகளைத்தான் பயன்படுத்துவார்கள். இந்த மருந்துகள் வேலை செய்வதற்கு இருப்பது நிமிடங்களாகும். அதன் விளைவுகள் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும் .

பெரும்பாலான பெண்களுக்கு , இந்த மருந்துகள் அல்லது இவற்றை போன்ற வேறு மருந்துகள் வலியை குறைகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக குறைப்பதில்லை , மருந்துகளின் இந்த குறைபாடுகள் , கர்ப்பிணிக்கு உடல் நலம் இல்லாததை போன்ற உணர்வை உண்டாக்குவதோடு மந்தமாக்கிவிடுவதால் , ஏற்ற நேரத்தில் நன்றாக முக்குவதற்கு இயலாமல் போய்விடும்.

இதனால்
கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லாவிட்டாலும் , பிரசவ நேரத்திலோ அல்லது அதற்கு முன்போ பெத்தடின் போன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டால், குழந்தை பிறக்கும்போது மந்தமாக உறங்கும் நிலை இருக்கலாம் அல்லது குறைவான சுவாசத்துடன் குழந்தை பிறக்கலாம் .

இதனால்தான் மருந்து போடும் முன்பு கொஞ்சம் பொறுத்திருக்க மருத்துவர் அறிவுறுத்துகிறார் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here