Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 87

கரு முதல் குழந்தை வரை – பாகம் 87

387
0
SHARE

கரு முதல் குழந்தை வரை

பிறப்புறுப்பு குழாயில் இருந்து மூளைக்கு வலி உணர்வுகளை கடத்தி செல்லும் நரம்புகளின் உணர்வை மரத்து போக செய்வதற்காக இந்த உணர்விழப்பு முறையை மேற்கொள்கிறார்கள் . இதற்கு புறமுதுகு தண்டுவழி அடைப்பு (எபிடூரல் ப்ளாக் ) என்று பெயர் . பல பெண்களுக்கு இந்த முறையானது முழுமையான வலி நிவாரணம் அளிக்கிறது .

இதனால் , பிற்காலத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை
ஒரு பக்கமாக உங்களை திரும்பி படுக்கவைத்து தண்டு வட எலும்புகளுக்கு இடையில் ஊர் ஊசியை மயக்க மருந்து மருத்துவர் செலுத்துவார். தண்டுவட நரம்புக்கு வெளியே ஓரிடத்தில் ஒரு பிளாஸ்டிக் குழாய் , ஊசியால் நுழைக்கபட்டு தொங்கி கொண்டிருக்கும் . ஊசியை வெளியே எடுத்த பிறகு பிளாஸ்டர் துணியால் பிளாஸ்டிக் குழாயை உங்கள் முதுகோடு ஒட்டி வைத்து விடுவார்கள் . இவற்றை செய்து முடிக்க இருபது நிமிடங்கள் தேவைப்படும் .

குழாயை கீழே வைத்து அதன் மூலம் மருந்து செலுத்தப்படும், இதற்காக பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை மயக்க மருந்து மருத்துவர் செயல்படுவார் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here