Home Diabetes நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

257
0
SHARE


நான் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது?

இது நீங்கள் என்ன மருந்தை உபயோகிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. எடுத்துக்காட்டாக ஆலபாகுளுகோஸிடேஸ் குறைப்பான்களைக் கட்டாயம் உணவுடன் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் உண்டு முடித்த பிறகாவது உடன் எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் அடுத்த உணவு வரை காத்திருக்கவும். மேட்ஃபார்மின் மருந்துகளை 6 மணி நேரம் தாமதமாகிவிட்டால் எடுத்துக்கொள்ள வேண்டாம். அடுத்த வேளை மருந்துகளையே எடுத்துக்கொள்ளுங்கள்.குறிப்பான மாற்றங்களுக்கு உங்கள் மருந்தாளுநர்களையோ மருத்துவர்களையோ கேளுங்கள்.

வகை2
நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த ஒரே மருந்து இருக்கிறதா?
2005 ஆம் ஆண்டில் எஃப்டிஏயின் ஆலோசனைக்கு குழு முராக்லிட்ஜார் எனும் புது வை வழி மருந்தினை அங்கீகரித்துள்ளது.இம்மருந்தில் இரண்டு செயல்கள் உள்ளன. ஒன்று, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது. மற்றொன்று, கொழுப்பு அளவில் மாற்றம் செய்வது. அதாவது டிரைகிளிசரைட் அளவைக் குறைத்து எச்டிஎல் அளவை அதிகரிக்கும். இது வகை 2 நீரிழிவிற்கு நல்லது. ஏனெனில் இநோயாளிகளால் பலர் கொழுப்பு மிகுதியால் அவதிப்படுவர். எனினும் எஃப்டிஏ , ஆலோசனைக்கு குழுவின் பரிந்துரைக்கு இசைவளிக்கவில்லை. ஏனெனில் பல இதய மருத்துவர்கள் மாரடைப்பு, மூளைத்தாக்கு, இதயச் செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் என ஐயம் தெரிவிக்கிறார்கள். இவர்கள் இந்த மருந்தினைப் பற்றி மேலும் பல ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here