Home Common Health Problems ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 55

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 55

    196
    0
    SHARE

    டென்க்ஷனில் இருந்து விடுதலை

    மனதில் ஏற்படும் சாதாரண டென்க்ஷனில் இருந்து மண் சிதைவு வரை எல்லாமே நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச்சனைகள்தான் . அதற்கான தீர்வுகளும் நம்மிடம்தான் இருக்கின்றன என்று நம்புங்கள்.

    வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்து கொள்ள பழகுங்கள் , மரணம் போன்ற பெரிய இழப்பையே தாங்கிக்கொள்ள முடியும்போது , வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் என்ற மனநிலையை உருவாக்கி கொள்ளுங்கள் .

    உங்களிடம் இருக்கும் திறமை எது என்று கண்டறிந்து அதில் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் . ஏதாவது ஒன்றில் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பது வேறு வகையான துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்க உதவும் . வெற்றி தோல்விக்கும், திறமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் . தோல்வி கிடைக்கும்போது மனத்தில் தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள் .

    மனத்தில் ஏதாவது சிக்கல் தோன்றினால் உடனே சாப்பிடும் அளவு குறைந்துவிடும் . எந்த காரணம் கொண்டும் சாப்பாட்டை குறைக்கும் சூழலுக்கு ஆளாகாதீர்கள். நன்றாக சாப்பிடுவதன் மூலமாகவே உடலையும் மனதையும் தெம்பாக வைத்து கொள்ள முடியும் .


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here