கருவானது சிக்கலான நிலையில் அமைந்திருந்தால் , பனிக்குடம் தடம் புரண்டு இருத்தல், குழந்தை பெரியதாக இருத்தல் , தாய்க்கு நீரிழிவு மற்றும் பிறப்புறுப்பு தொற்று நோய்கள் இருத்தல் , குழந்தைக்கு டாக்சீமியா நோய் இருத்தல், வலி எடுக்காமல் போகும் நிலை .
இப்படி சில முக்கிய நிலைகளின் சிசேரியன் அறுவை பேறு தவிர்க்க முடியாததாகி விடுகிறது .
அவசர நிலை தேவைப்பட்டாலன்றி இதற்கு அவசியமில்லை , சிசேரியன் தேவைப்படுவதற்கு முன்பு அதை பற்றி மகப்பேறு மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம.
கடந்த முறை எனக்கு சிசேரியன் சையது குழந்தையை வெளியே எடுத்தார்கள் . இந்த முறையும் அப்படிதான் நிகழும் என்கிறார்கள். இது உண்மையா எனக்கு சிசேரியனை நினைத்தாலே பயமாக இருக்கிறது .
கடந்தமுறை சிசேரியன் செய்துகொண்ட சுமார் அறுபது சதவீதத்தினர் இயல்பான முறையிலேயே அடுத்த குழந்தையை பெறுகிறார்கள். முதன் முறை சிசேரியன் நிகழ்ந்தால் அடுத்தமுறையும் சிசேரியன் நடக்கும் என்பது தேவையற்ற பயத்தை கொடுக்கும் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதைப்பற்றி மருத்துவரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்