Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 89

கரு முதல் குழந்தை வரை – பாகம் 89

200
0
SHARE

கருப்பையின் மேல் பாகம் அகலமாகவும் , கீழ்ப்பகுதி குறுகலாகவும் இருப்பது இயல்பு. அகன்ற பகுதியில் குழந்தையின் புட்டங்களும் , குறுகிய பகுதியில் தலையும் அமைந்திருந்தால் குழந்தை முதலில் தலையை வெளியே நீட்ட பிறக்கும். அவ்வாறு இல்லாமல் புட்டம் கருப்பையின் கீழ்ப்பகுதியில் இருந்தால் புட்ட உதயம் ஏற்படும் .

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை செங்குத்தான நிலையில் கால்கள் மடங்கியவாறு உட்கார்ந்த்திருப்பது, ஒரு காலோ , இரண்டு கால்களோ தோள்பட்டை அருகில் பாதங்கள் இருக்குமாறு நீட்டியிருத்தல், குழந்தையின் திருகம் எனப்படும் இடுப்பு கூட்டு பகுதி இடப்பக்கம் முன்னோக்கியிருத்தல், குழந்தையின் திரிகப்பகுதி இடப்பக்கமாக பின்னோக்கியிருத்தல் , வலப்பக்கமாக முன்னோக்கிஉள்ள நிலைகள், குழந்தையின் திரிகம் வலப்பக்கமாக பின்னோக்கி இருத்தல் ஆகிய நிலைகளில் புட்ட உதயம் ஏற்படுகிறது . இந்த நிலையில் தாய்க்கு வலி அதிகமாக ஏற்படுவதோடு , குழந்தைக்கு பல இடையூறுகள் தோன்றும் . உதாரணமாக , குழந்தையின் புட்டம் வெளியே வரும்போது தொப்புள் கொடி அதை உள்ளே இழுக்கும் . இந்த நிலையின்போது தொப்புள் கொடி திணறல் ஏற்படும் .

வெளிப்பகுதி காற்றில் இருக்கும் நிலையில் குழந்தை சுவாசிக்க ஆரம்பித்துவிடும். இதனால் மூச்சு திணறல் உண்டாகும் .

குழந்தையின் மலம் கலந்த பனிநீர், குழந்தையின் நுரையீரலுக்கு செல்லும் அபாயமும் ஏற்படும் .

கொஞ்சம் காலதாமதமானாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து போர்செப் எனப்படும் இடுக்கியை கொண்டு குழந்தையை இழுத்தால் தலை நசுங்குதல் , மூளையில் ரத்த கசிவு , முதுகெலும்பு தண்டு முறிதல் , குழந்தையின் உள்ளுறுப்புகள் நசுங்குதல், கழுத்துப்பகுதி தசைகள் கிழிதல் என பல தொல்லைகள் உண்டாகும் .

பிரசவத்தில் மூன்று நிலைகள் உள்ளன . முதல் நிலையில் கருப்பை கழுத்து படிப்படியாக திறக்கிறது . (விரிகிறது )

இரண்டாவது நிலையில் , யோனியில் தள்ளப்பட்டு குழந்தை பிறக்கிறது .

மூன்றாவது நிலையில், கருப்பை சுவரில் இருந்து பனிக்குடம் வெளியேறி , யோனியில் இருந்து வெளித்தள்ளப்படுகிறது. இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்வது நல்லது .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here