ஊசி வழி சிகிச்சைகள் :
பிஜிஈ – 1 என்ற மருந்தை ஊசியின் மூலம் ஆணுறுப்பின் அடிப்பகுதியில் செலுத்தும்போது இரத்த நாளங்கள் திறக்கின்றன. இதனால் விரைப்புத்தன்மை உண்டாகிறது. இதனுடன் வேறு மருந்துகளை சேர்த்தும் ஊசிவழி சிகிச்சை அளிக்கலாம். சிலருக்கு வலியிருப்பதால் ஊசி குத்திக்கொள்ள விரும்புவதில்லை. நீண்ட நேரம் விரைப்புத்தன்மை அடங்காமலிருத்தல், ஊசி குத்தும் இடத்தில் காயம் மற்றும் வடு ஏற்படுதல் போன்றவை இவர்களுக்குத் தோன்றும் சில பிரச்சினைகளாகும். இந்த மருந்தை சிறுநீர் வெளிவரும் துவாரத்தின் முனையில் செருகவேண்டியிருக்கும்.
மற்ற சிகிச்சைகள் :
டெஸ்டோஸ்டீரான் குறைபாடுள்ளவர்கள் டெஸ்டோஸ்டீரான் பதிலி சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள் . சிலருக்கு வாக்யூம் கருவியின் மூலம் விரைப்புத் தன்மை உண்டாக்கப்படுகிறது. எல்லா சிகிச்சை முறைகளும் தோல்வியடையும்போது இம்ப்ளான்ட் என்ற புதிய முறையில் கருவி பொருத்தப்படுகிறது. இரத்த நாள அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
ஆண்மைக் குறைபாடுள்ளவர்களுக்கான துவக்க சிகிச்சை :
மருத்துவர்கள் முதலில் வயாகரா மாத்திரைகளை பரிந்துரை செய்து சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். இதய நோய் அல்லது வேறுபிற ஆபத்து விளைவிக்கும் நோய் வாய்ப்புகள் இருக்கும் நிலையில் அது பற்றிய துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த சிகிச்சையளிக்கப்படுகிறது .
பாலுறவின்போது எவ்வளவு நேரம் விறைப்புத்தன்மை தேவைப்படுகிறது. உச்சக்கட்டம் அடைய எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டியது முக்கியமாகும். இதற்கேற்ப சிகிச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இதய நோயின் தீவிரத்தை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை, இதய நோயாளிகள் எவ்வளவு நேரம் சிகிச்சை பெறலாம் என்பதை அறிவதற்கான பரிசோதனை ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்