Home Common Health Problems மனித உடலின் கதை

    மனித உடலின் கதை

    398
    0
    SHARE

    பரிணாமச்சிதைவு எனும் நச்சுச்சூழல் :

    உயிர்ச்சத்து “சி” பற்றாக்குறையால் ஏற்படுகிற அரிநோய், படகோட்டிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இந்த உயிர்ச்சத்துக்கு முதன்மை இயற்கை மூலாதாரமான, வாடாத காய் – கனிகளை உண்ணாத பிறருக்கும் பொதுவாக வரக்கூடியது.

    நவீன விஞ்ஞானம் 1932 ஆம் ஆண்டு வரையில் அரிநோயின் காரணத்தைக் கண்டு பிடிக்கவில்லை.

    எனினும் உயிர்ச்சத்து “சி” நிறைந்த சில தாவரங்களைத் தின்று இந்த நோயை தடுக்கிற வழியை பல சமூகங்களும் கண்டுகொண்டன.

    இன்றைக்கு அரிநோயை அரிதாகவும் காண முடியவில்லை.

    காரணம் , பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயிர்ச்சத்து “சி” யைச் சேர்ப்பதன் மூலம் அது வாடாத பழங்கள், அல்லது காய்களை உண்ணாத மக்களிடையே கூட எளிதில் தடுக்கப்பட்டது.

    எனவே நாம் இன்றைக்கு அரிநோயின் காரணங்களை விளைவுள்ளவாறு தடுத்து விடுவதால் அது ஒரு கடந்த கால பொருத்தமின்மை நோயாகும்.

    இதற்கு மாறுபட்டு, பற்குழிகளை பரிசீலியுங்கள்.

    பற்குழிகள், பற்களின் மீது ஒரு மெல்லிய அடுக்காக படிந்துள்ள, பற்கறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேக்டிரியாக்களின் வேலையாகும்.

    உங்கள் வாயிலுள்ள பெரும்பாலான பேக்டிரியாக்கள் இயல்பானவை, கேடற்றவை என்றாலும் ஒருசில வகைப் பிரிவுகள், நாம் மெல்லுகிற உணவுகளிலுள்ள, மாவுப்பொருளையும், சர்க்கரைகளையும் தின்று அவை, அதன் கீழிருக்கும் பல்லைக் கரைக்கக்கூடிய அமிலத்தை வெளியிடுகின்றன.

    இதனால் அங்கே ஒரு குழி உருவாகி விடுகிறது.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here