Home Love Part காதல் விதிகள் – பாகம் 13

காதல் விதிகள் – பாகம் 13

486
0
SHARE

காதலர்களிடையே நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். ஆனால் உங்களால் உங்கள் காதலரை நம்ப முடியவில்லை என்றால் , உங்களால் மகிழ்ச்சியாக இருங்க முடியாது .ஒருவரை நம்ப முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நீங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் . உங்களிடம் ஏற்கெனவே பொய் சொல்லப்பட்டிருக்கலாம் . அதனால் , மற்றவர்களை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம் . அப்படிஎன்றால் , இதுவரை உங்களுக்கு தீவிரமான உறவு ஏற்பட வில்லை என்று அர்த்தம் . நீங்கள் மற்றவர்களை நம்பும்வரை இந்த உறவு ஏற்படவே ஏற்படாது . இது கொஞ்சம் கஷ்டம்தான் . ஏற்கெனவே உங்கள் சந்தேகங்கள் உறுதியாகிருந்தால் , இது இன்னும் கஷ்டம் . அதனால் தான் இப்போது நல்ல உறவு வேண்டும் என்று சொல்கிறேன் . நீங்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனில் , அது உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது .

இது உங்கள் காதலருக்கு எப்படி இருக்கும் ? அவர் குறையே இல்லாமல் இருக்கிறார் , ஏதும்
தப்பே செய்யவில்லை , அவரால் முடிந்தவரை நேர்மையாக இருந்து வருகிறார். ஆனாலும் நீங்கள் அவரை நம்பவில்லை. அதுவே உங்கள் உறவை சீர்குலைத்து விட கூடும். உங்களுடைய இந்த நம்பிக்கை பிரச்சனையை அவர் எவ்வளவுதான் கனிவுடன் அணுகினாலும் இறுதியில் அவர்களை மனம் தளரவே செய்யும் . அவரை நீங்கள் காதலிக்க வில்லை என்று நினைக்கவே வைக்கும் .

உங்களுக்கு எப்படிப்பட்ட முன்அனுபவம் ஏற்பட்டிருந்தாலும் ஏற்கெனவே யாரோ செய்த தவறுகளுக்கு உங்கள் காதலரை பழிவாங்க கூடாது . அவநம்பிக்கையை நீங்களா அல்லது உங்கள் காதலரா யார் ஏற்படுத்துகிறார்கள் என்பது உங்கள் அடிமனத்துக்கு தெரியும் . பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதை பற்றி நீங்கள் நேர்மையுடன் யோசிக்க வேண்டும் .

தங்களிடம் இருக்கும் நம்பிக்கை குறையை சரிசெய்து கொள்ள இயலாமல் , நல்ல உறவுகளை
சிதைத்து கொண்டு , பெரிய சீரழிவை தேடிக்கொண்ட நபர்களை எனக்கு தெரியும் . நீங்கள் மிஸ்டர் அல்லது மிஸ் உத்தமரை தேடிக்கொண்டு இருந்தால் , அப்படிப்பட்டவரை சந்திக்கும் முன்பு , உங்களுடைய இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுகொள்ளுங்கள். உங்களை யாரோ ஒரு காலத்தில் ஏமாற்றினார் என்பதற்க்காக இப்போது இருக்கும் உங்களை உறவை சிதைத்து விடாதீர்கள் .

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here