Home Common Health Problems ஐ.டி . துறையின் பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 60

    ஐ.டி . துறையின் பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 60

    93
    0
    SHARE

    டிஸ்கோ

    டிஸ்கோ செல்வதுதான் தங்களின் அடையாளம் என்று ஐ.டி ஊழியர்கள் கருதுகிறார்கள். டிஸ்கோ கிளப்பில் துணையுடன் செல்பவர்களுக்கு நல்ல மரியாதை கிடைப்பதால் , அதற்கென துணை தேடுவதும் , அவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பதும் மிக அவசியம் என்றும் நினைக்கிறார்கள். டிஸ்கோ கிளப்களில் சிறப்பாக செயல்படுவதற்காக டான்ஸ் மட்டும் பழகினால் பிரச்சனையில்லை. போதை பொருள்களையும் பழக்கி கொள்வதுதான் வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.

    அறிமுகம் இல்லாத துணையை டிஸ்க்கோவுக்கு அழைத்து செல்லும் பழக்கம் பலமுறை
    படுக்கைவரை கொண்டு சென்றுவிடுகிறது. இதனால் , பலவிதமான பாலியல் பிரச்சனைகளுக்கு
    அவர்கள் ஆளாகிறார்கள் .

    தனக்கு துணையாக வந்த பெண் , இன்னொருவருடன் சேர்ந்து ஆடும்பொழுது , நாகரீகத்துக்காக சிரித்தாலும் பெரும்பாலான ஆண்கள் மனதளவில் பெரும் பாதிப்பை அடைகிறார்கள் . ஒரு கட்டத்துக்கு மேல்,1 அந்த வலியை பொறுக்க முடியாமல் ஜோடியாக ஆடுபவரோடு தகராறில்
    இறங்கி, கீழ்த்தரமான நிலைக்கு சென்று விடுகிறார்கள் .

    டிஸ்கோவுக்கு செல்பவர்களுக்கு மட்டும்தான் பிரச்சனை வரும் என்று அர்த்தமல்ல . பெற்றோரின் அனுமதி இன்றி டிஸ்க்கோவுக்கு செல்ல முடியாதவர்களும் , துணையின்றி தனியாக டிஸ்க்கோ கிளப் செல்பவர்களும், கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையாளர்களாக, மொடாக்குடியர்களாக மாறுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மற்றவர்களை போல் தங்களால் ஆடிப்பாடி அனுபவிக்க முடியவில்லையே என்று அவர்கள் மனதுக்குள்ளேயே குமைகிறார்கள் .

    வார இறுதியில் நடைபெற இருக்கும் கேளிக்கைக்காக வாரத்தின் முதல் நாளில் இருந்தே காத்திருந்து வேலைகளில் ஆர்வம் குறைந்து டிஸ்க்கோவுக்கு அடிமையானவர்கள் அதிகம் .

    மாதத்தில் ஏதாவது ஒரு நாளை இதுபோன்று கொண்டாடுவது தவறில்லை . வாரந்தோறும் செல்லும்போதுதான் அதற்கு அடிமையாகும் நிலை உருவாகிறது. டிஸ்கோவுக்கு செல்வதற்காக
    வலிந்துபோய் ஒரு துணையை பிடிப்பதாலும், நிறைய பிரச்சனைகளை உண்டாகின்றன .

    எனவே , நன்கு பழகிய துணை இருந்தால் மட்டும் அத்தகைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம் , அளவுக்கு மீறாமல் துணையில்லை, டிஸ்க்கோவுக்கு போக முடியவில்லை என்பதற்கெல்லாம் வருத்தப்படாதீர்கள். சந்தோஷம் என்பது டிஸ்க்கோவில் இல்லை , உங்கள் மனதில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here