Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 92

கரு முதல் குழந்தை வரை – பாகம் 92

176
0
SHARE

மூன்றாவது நிலை

பனிக்குடத்தின் பிறப்பு
உங்கள் குழந்தையை ஒன்பது மாதங்களாக போற்றி பாதுகாத்து வந்த பனிக்குடம் வெளியேறுவதுதான் மூன்றாவது நிலை.

குழந்தை பிறந்த பிறகு கடைசியாக நீங்கள் முக்கி உந்தும் போது பனிக்குடம் வெளியேறும் .
குழந்தை பிறந்த பிறகு கருப்பை சுருங்குவதற்காக தொடையில் ஊர் ஊசி போடப்படும் . இவ்வாறு செய்யப்படுவதை நீங்கள் கவனிக்க முடியாத நிலையில் இருக்கலாம் . நீங்கள் ஏற்படுத்தும் இன்னொரு முக்கலின் போது வெளியாகும் நஞ்சுக்கொடியில் இருந்து பனிக்குடத்தை மருத்துவர் பிரித்து எடுப்பார். பனிக்குடத்தின் பிறப்பு பொதுவாக சுலபமாக இருக்கும் .

அரசு மருத்துவமனையில் தாராளமாக நீங்கள் பிரசவம் பார்த்து கொள்ளலாம். பொதுவாக குழந்தை மாற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை . இதற்காக மருத்துவர்கள் மட்டுமின்றி மருத்துவமனை பணியாளர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

குழந்தை பிறந்த பிறகு சில சுத்தங்களை அங்கே செய்ய வேண்டியிருக்கும் . பிரசவத்தினால் உங்கள் ஆசனவாய் தசை கிழிந்திருந்தால் அல்லது கிழிக்கப்பட்டிருந்தால் தையல் போடப்படும் . செவிலியர் உங்களை குளிக்க வைத்து , குழந்தையையும் சுத்தம் செய்வார்கள் . உங்கள் குழந்தையை எடை போட்டு அளந்தும் அதன் கையில் பெயர் அட்டை ஒன்றை கட்டுவார்கள் . குழந்தையை, குழந்தை மருத்துவ நிபுணர் நுணுக்கமாக பரிசோதித்து , அவரது குறிப்பை எழுதுவார். பல பெரிய மருத்துவமனைகளில் குழந்தை மாற்றம் போன்ற தவறுகள் நடப்பதை தடுப்பதற்காக , குழந்தை பிறந்த இந்த நிலையிலேயே குழந்தையின் கைவிரல் ரேகைகளை பதிவுசெய்து கொள்கிறார்கள் .

சில சமயங்களில் போர்செப் எனப்படும் கிடுக்கியை பயன்படுத்தி யோனியில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கும் நிலை ஏற்படலாம். தாய் மிகவும் களைப்படைந்த நிலை , கருப்பை சுருக்கங்கள் போதுமான அளவு இல்லாவிட்டால் அல்லது குழந்தைக்கு திணறல் ஏதேனும் ஏற்படுவதுபோல் இருந்தால் இது தேவைப்படுகிறது.

போர்செப் பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில் , பகுதி உணர்விழப்பு செய்யப்படுகிறது. போர்செப் இடுக்கி கருவி , குழந்தையின் தலையை சுற்றி நேர்த்தியாக பொருத்தப்பட்டு , உறுதியாக பற்றி இழுக்கும்போது குழந்தை பிறந்துவிடுகிறது. அதேநேரத்தில் தாயாரும் முக்கி குழந்தையை உந்தித்தள்ள உதவலாம் .

குழந்தையின் தலையில் கிடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் தெரியும் சிவப்பான அடையாளம் போகப்போக மறைந்து விடும் . கிடுக்கியை பயன்படுத்தி பிரசவிக்க செய்வதற்கு எபிசியோடமி எனப்படும் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள ஆசனவாய் எனப்படும் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள ஆசனவாயை சூழ்ந்த தசை கிழிப்பை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் , தையல் போட வேண்டியிருக்கும் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here