Home pregnancy பெண்கள்….. பிரச்சனைகள்…..தீர்வுகள்…..

பெண்கள்….. பிரச்சனைகள்…..தீர்வுகள்…..

135
0
SHARE

கேள்வி:
என் வயது 37. திருமணமாகி பத்தாண்டுகள் கழித்து நான்தாய்மையடைந்திருக்கிறேன். டாக்டர் என்னிடம், “கர்ப்பிணிகளை பிரசவத்திற்கு தயாராகும் பிரசவ முன்னேற்பாட்டு வகுப்பு நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும்” கூறுகிறார். நான் அதில் கலந்துகொள்வது நல்லதா? அந்த வகுப்பில் கலந்து கொண்டால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

பதில்:
குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க தாயாரை தயார்படுத்தவே இது போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வகுப்பில் கலந்துகொள்ள வேண்டியவர்கள்:

.16 வயதுக்கு உள்பட்ட, 36 வயதுக்கு மேற்பட்ட முதல் கர்ப்பிணிகள்.
.நீண்டகாலம் குழந்தை இல்லாதவர்கள்.
.கருகுழந்தையின் நிலை மாறியிருப்பவர்கள்.
.குழந்தையின் புட்டம், கை கால்கள், ஆகியவை இடுப்புகூட்டுப்பகுதியில் பொருந்துமாறு குழந்தை திரும்பிய நிலையில் இருப்பவர்கள்.
.ஏற்கெனவே கருச்சிதைவு, குறைப்பிரசவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

. குறுகிய இடுப்புக்கூட்டை உடைய பெண்கள்.
. ஏற்கெனவே சிசேரியன் செய்தவர்கள்.
. ரத்த சோகை, சர்க்கரை நோய், வலிப்பு உள்பட ஒன்று அல்லது அதற்கு மேலான னாய் உள்ளவர்கள்.
. இரட்டை கருவைச் சுமப்பவர்கள்.
. நீடித்த கர்ப்பம் உள்ளவர்கள்.

கருவுடன் வளரும் நஞ்சும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருப்பையில் கரு உருவாகி, குழந்தை உயிரோடு பிறக்க இது துணை செய்கிறது. இதன் மத்தியில் இருந்து தொப்புள் கோடி கிளம்பி கருகுழந்தையின் தொப்புள் வரைச் செல்லும்.

கருவின் வளர்ச்சிக்குரிய ஆகாரத்தையும், வஸ்வதற்கு தேவையான ஆக்சிஜனையும்பதாயின் ரத்தத்தில் இருந்து எடுத்து கருகுழந்தைக்கு இது ஊட்டுகிறது. கருக் குழந்தையின் ரத்தத்தை தொப்புள்கொடி வழியாக பெற்று, அதன் கழிவுப் பொருள்களை அகற்றுகிறது.

கருப்பைக்குள் கருகுழந்தையின் உடல் சேதமடையாமல் காத்து, நோய் அணுகாமல் வைத்திருப்பதும், கடும் குளிர்ச்சி குழந்தையை தாக்காமல் காப்பதும் நஞ்சுதான். கருவின் நுரையீரலாக, அன்னப் பாதையாக, சிறுநீரைப் பிரிக்கும் உறுப்பாக பணியாற்றும் நஞ்சு, கருப்பையின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நஞ்சு, குழந்தைப் பேற்றின் போது குழந்தை வெளியான சில நிமிடங்களில் அதே வழியாக வெளியேறிவிடும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here