Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 94

கரு முதல் குழந்தை வரை – பாகம் 94

122
0
SHARE

ரத்த இன பிரிவில் மனைவிக்கு எதிர்மறையினமும் (ஆர்.எச்.நெகடிவ்), கணவருக்கு உடன்பாட்டினமும் (ஆர்.எச்.பாசிடிவ்) இருந்தால் , அடுத்து பிறக்கப்போகும் குழந்தையை காப்பாற்றுவதற்காக முதல் குழந்தையை பிரசவித்த 72 மணி நேரத்தில் பெண்ணுக்கு ஆன்டி -டி என்ற ஊசி போடுவார்கள். இந்த் ஊசியை போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்து கர்ப்பம் தரிப்பது பிரச்சனையாகிவிடும்.

பெரும்பாலான பெண்களுக்கு பிரசவ வலி தானாகவே ஆரம்பிக்கும் . பல காரணங்களால் சிலருக்கு வலி எடுக்காது . தாய் அல்லது சேயின் உடல் நலனுக்கு ஏதேனும் ஆபத்து இருக்க வாய்ப்பிருந்தால் பிரசவத்தை தூண்ட வேண்டியிருக்கும் . உதாரணமாக , குழந்தை பிறக்க தாமதமானால், தாய்க்கு மிகை ரத்த அழுத்தம் , டாக்சீமியா அல்லது நீரிழிவு நோய் இருக்குமானால் செயற்கை தூண்டுதல் ஏற்படுத்தப்படும் .

அநேகமாக , இந்த செயல்முறை ஒரு திட்டமிடப்பட்ட வழியில் மருத்துவமனையின் அனுமதியோடு அல்லது மகப்பேறு மருத்துவரின் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது. பிரசவ தூண்டுதலை இரண்டு வழிகளில் மேற்கொள்வார்கள் . ஒன்று , பனிக்குடத்தை உடைத்தல் மூலமாக , இன்னொன்று , பிரசவத்தை துரிதப்படுத்தும் ஹார்மோனை தாயின் கையில் நரம்புவழியாக செலுத்துதல் மூலமாக .

பனிக்குடத்தை உடைத்ததும் , குழந்தை பிறக்கும் சாத்திய கூறு இருந்தால் உடனடியாக தசை சுருக்கம் ஆரம்பிக்கும் .இவ்வாறு குழந்தையின் தலை ஏற்கெனவே இடுப்புக்கூட்டு பகுதியில் வந்திருந்தால் , கருப்பை வாய் மிருதுவாகி , விரிவடைய ஆரம்பித்து , பிரசவம் நிறைவேறும் கட்டத்தில் இருக்கும் . அதனுடைய விளைவுகள் திருப்திகரமாக இருப்பது வழக்கம் .

இந்த செயல்முறை மூலம் , 48 மணி நேரத்துக்கு குழந்தை பேறு நிகழாவிட்டால் நோய் தொற்று பரவும் அபாயம் உண்டு.குழாந்தையின் தொப்புள்கொடி வெளித்தள்ளப்படுவதற்கான அபாயமும் இருப்பதால் , இந்த சூழ்நிலை கொஞ்சம் சிக்கல் மிக்கதாகி , தீவிர சிசேரியன் பிரிவு சிகிச்சை தேவைப்பட கூடும் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here