Home pregnancy கரு முதல் குழந்தை வரை- பாகம் 95

கரு முதல் குழந்தை வரை- பாகம் 95

259
0
SHARE

பெண்ணின் பிறப்புறுப்பு பாதை சிறியதாக உள்ள நிலையில் , குழந்தையை வேறு வழியில் எடுப்பதற்காக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .

பிரசவத்தின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு அல்லது தாய்க்கு கழலைகள் இருப்பது , கருப்பை வாய் திறக்காமல் போவது , குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுவது அல்லது குழந்தை தடம் மாறியிருப்பது போன்ற இயல்புக்கு மாறான நிலைகளில் இந்த் அறுவை பேறு மேற்கொள்ளப்படுகிறது .

வழக்கமாக , அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் சிசேரியன் சிகிச்சைக்காக திறப்பு ஏற்படுத்தபடுகிறது. கூபக முடிகள் மீண்டும் முளைத்த பிறகு இது மறைக்கப்பட்டுவிடுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையானது , பொது உணர்விழப்பு முறையிலோ அல்லது சிலவேளைகளில் புறமுதுகு தண்டுவட வழியில் உணர்விழப்பு செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது .

புறமுதுகு தண்டுவட வழி உணர்விழப்பின் போது நீங்கள் விழித்து கொண்டிருப்பீர்கள். ஆனால் வலி தெரியாது. கிள்ளும் உணர்வும் , லேசாக இழுக்கும் உணர்வும் மாத்திரமே இருக்கும். கண்களை மறைத்து கொள்ள ஓர் அட்டை தரப்படுவதால் அந்நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியாது .

பெரிய அறுவை சிகிச்சைகளின் போது இருப்பதை போலவே , சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பிறகு , சில நாள்கள் வரை உங்களுக்கு அசவுகரியமாக இருக்கும் . உட்காரவோ , நேராக நிமிந்து நிற்கவோ சிரமம் உண்டாகும் . சிரிக்கக்கூட முடியாது , நீங்கள் மருத்துவமனையில் , ஒரு வாரத்துக்கும் அதிகமான நாள்கள் தங்கவேண்டியிருக்கும் . வீடு திரும்பிய பிறகும் நீங்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கு கொஞ்ச நாள்கள் ஆகும். உங்கள் தசைகள் மீண்டும் நன்றாக செயல்படுவதற்கு , பிரசவத்துக்கு பிறகு மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here