Home Common Health Problems ​ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 62

    ​ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 62

    226
    0
    SHARE

    ஆண்- பெண் நண்பர்களின் ஜாலி மீட்டிங்

    மது குடிக்காதவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் எல்லாம் ஜாலி மீட்டிங் என்ற பெயரில் விடுமுறையில் ஒன்று சேர்வார்கள் . ஆரம்ப நாள்களில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இந்த மீட்டிங் நடக்கும் .

    பாட்டு , நடனம் , கேலி , கிண்டல் என்று சந்தோஷமாக பொழுதுபோகும் . அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது அல்லது ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டு வருவது என்றுதான் முதலில் குடும்ப பாங்காக ஆரம்பிப்பார்கள் .

    அடுத்தகட்டமாக பீச் , சினிமா , வெளியூர் என்று போக தொடங்கும்போது , கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்ந்து போகும் . மற்றவர்கள் எல்லாம் குடித்து , செக்ஸ் லீலைகளில் ஈடுப்படும்போது , நாம் சும்மா ஜாலியாக பேசிக்கொண்டுதானே இருக்கிறோம் என்றுஆண் , பெண் நண்பர்கள் நெருக்கமாக பழக தொடங்குவார்கள் .

    அந்த நெருக்கம் வெகு விரைவில் படுக்கை அறையில்தான் போய் முடியும் . இந்த மீட்டிங்கிலும் பெரும்பாலும் உடன் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே பங்கெடுப்பதால் அலுவலக வேலைகள் பற்றியே பேசி மேலும் மேலும் டென்ஷனாகி கொள்வார்கள் . இப்படி ஜாலி மீட்டிங் செல்வதை பெற்றோர்களோ , பிற ஊழியர்களோ கண்டிக்கும் போது மீறித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் . இது கூடுதல் டென்க்ஷனையும் எரிச்சலையும் கொடுத்து மனத்தை பாடாய் படுத்திவிடும். இதன் விளைவுகள் எல்லாமே வேலையில் திறமையின்மையில் தான் முடியும் .

    டேட்டிங் மற்றும் செக்ஸ்
    நல்ல சம்பாத்தியம் இருப்பதால் வீடுகளில் ஐ.டி. ஊழியர்களுக்கு நல்ல மரியாதை இருக்கும் . அதனால் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொள்வார்கள் . காதல் கல்யாணம் என எந்த விஷயத்துக்கும் யாருடைய ஆலோசனையும் கேட்க பிடிக்காது . யாராவது வலிந்து வந்து ஆலோசனை சொன்னாலும் கேட்டுக்கொள்ள மாட்டார்கள் .

    ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இனைந்து டேட்டிங் செல்வதில் எந்த தவறும் இல்லை என்ற மனபான்மைக்கு வந்துவிடுவர்ர்கள் . டேட்டிங்கில் ஆரம்பிக்கும் பழக்கம் , முறை தவறிய செக்சில் முடிந்து , தீராத நோய்களை உண்டாக்கிவிடும்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here