Home Common Health Problems ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63

    462
    0
    SHARE

    கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பதுபோல் , அதை நிறுத்துவதற்கான மன்நிலையையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் . எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடாது. ஒரு வாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையை பகிர்ந்து அனுபவித்தால் எந்த பிரச்சனையும் வராது .

    இந்த் விஷயத்தில், நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் . ஊழியர்களை தக்க வைத்து கொள்வதற்காக இது போன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்களும் ஊக்குவிக்கவே செய்கின்றன .

    ஊழியர்களுக்கு தேவையான வாகன வசதி செய்து தருவது , மது மற்றும் உணவுகள் ஏற்பாடு செய்வது , ஹோட்டல் ரிசர்ர்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாக கவனிக்கிறார்கள் . இவை எல்லாம் , ஊழியர்கள் நன்மைக்காக செய்யப்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன.

    இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர , நன்மை எதையும் செய்து விடாது . ஊழியர்கள், அதன் பாதாளத்தை நோக்கி பயணப்பட்டால் , நிறுவனங்கள் காய் கொடுத்து அவர்களை மீட்க வேண்டும் , மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி வடிய கூடாது .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here