Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 96

கரு முதல் குழந்தை வரை – பாகம் 96

582
0
SHARE

குழந்தை பிறக்கபோகும் நேரத்தில், கருப்பை வாய் திறந்து இரண்டாவது நிலை என்று ஒன்று வரும். அந்த நேரத்தில், குழந்தை எளிதாக பிறப்பதற்கு வசதியாக முக்குவது உபாயோகமாக இருப்பதை உணர்வீர்கள்.

அவ்வாறு முக்குவதற்கு இப்போதே உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள் . அதற்கான சில வழிகள் .

தலையும், தோள்பட்டையும் உயர்ந்திருக்குமாறு மல்லாந்து படுத்து கொள்ள வேண்டும் . இந்த பயிற்சியை வீட்டில் மேற்கொள்ள தலையணையை பயன்படுத்தலாம். பிரசவ அறையில் படுக்கையின் தலைப்பகுதி உயரமாக தூக்கப்பட வேண்டும் .

முழங்கால்களை வளைத்து கால்களை அகலமாக வைத்து கொள்ளுங்கள் .

வேகமாக ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுங்கள் .

எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவுக்கு மூச்சை வேகமாக இழுத்து வெளிவிடாமல் அடக்கி வையுங்கள்.

உண்மையான் நேரம் வரும்போது இவ்வாறு மூச்சை அடக்குவது , உங்கள் உதரவிதானத்தை நிலைப்படுத்தவும் , உங்கள் வயிற்று சுவர் கீழ் நோக்கி கருப்பை மற்றும் குழந்தையின் மீது பலமான அழுத்தத்தை கொடுக்கவும் உதவிசெய்து , குழந்தை பேற்றுக்கு துணை புரியும் .

பயிற்சியின்போது நிஜமாகவே முக்காதீர்கள் . பிரசவ நேரத்தில் அவ்வாறு செய்வதற்காக பயிற்சி மட்டுமே எடுப்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

பயிற்சியின்போது நிஜமாகவே முக்காதீர்கள் . பிரசவ நேரத்தில் அவ்வாறு செய்வதற்காக பயிற்சி மட்டுமே எடுப்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

தேவையான அளவுக்கு உங்களால் மூச்சை பிடிக்க இயலவில்லை என்றால் அவ்வப்போது மூச்சை விரைவாக இழுத்துவிடலாம் . ஒவ்வொரு 60 முதல் 65 விநாடிகள் அடங்கிய சுவாச முறையில் இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் மூச்சை இழுத்துவிட முயற்சிக்காதீர்கள்

தொடர்ந்து முக்கலாம். தலையை பின்புறமாக அசைத்து மூச்சை வெளிவிடுங்கள்.

விரைந்து , ஆழமாக மூச்சை உள்ளிழுங்கள். உங்கள் தலையை மீண்டும் முன்னோக்கி சாய்த்து சுவாசத்தை நிறுத்திவையுங்கள்.

தசைச்சுருக்கம் முடிந்தபிறகு , முற்றிலுமாக உடலை தளர்ந்துங்கள் . ஆழ்ந்து மூச்சை இழுத்து சுவாசித்து பெரு மூச்சு விடுங்கள் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here