Home pregnancy கரு முதல் குழந்தை வரை- பாகம் 97

கரு முதல் குழந்தை வரை- பாகம் 97

429
0
SHARE

நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் பிரசவத்தின்போது மிக சுலபமாக குழந்தையானது வெளி தள்ளப்படும். அதற்காக , மூச்சு பயிற்சியின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

சுவாசிக்கும் போது மார்பக சுவர் விரிவடைந்து, உதர விதானம் அதிகமான அளவு கீழே இறக்குவதுதான் முழுமையான சுவாசம் , அவ்வப்போது, தளர்வு நிலையில் இருக்கும்போது ஆக்ஜிசனை நிறப்பிகொள்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும் .

சுவாசிக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

ஒரே சமயத்தில் , ஆழ்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுவாசியுங்கள் .

உடல் குலுங்கும் வகையில் , சீறுவது போன்ற சத்தத்துடன் வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ காற்றை வெளிவிடுங்கள்.

சுவாசத்தை தொடர்ச்சியாக, சுலபமாக லயத்தோடு தொடருங்கள் .

உங்களை முழுவதுமாக தளர்த்திக்கொள்ளுங்கள். உடனே உங்கள் உடல் அதிக கணமாக இருப்பதைப்போல் தெரிவததோடு , எந்த வேலையும் உடனே செய்வதற்கு சிரமமாக இருக்கும் .

முதல் நிலை பிரசவத்தின் போது
கடைசி முப்பது அல்லது நாற்பத்தைந்து விநாடிகளுக்கு முன் உங்களுக்கு சுவாச குழாயில் திடீரென தசை சுருக்கம் வந்ததாக நினைத்து கொள்ளுங்கள் .

ஒவ்வொரு சுருக்கத்தின்போதும் ஆழ்ந்து சுவாசித்து, வேகமாகவோ , மெதுவாகவோ வெளிவிடுங்கள் .

ஆழ்ந்து , மெதுவாக லயத்துடன் மீதம் உள்ள கான்ட்ராக்க்ஷன் முழுவதும் சுவாசியுங்கள் .

கான்ட்ராக்க்ஷன் முடிந்து , இன்னொரு முழுமையான சுவாசத்தை மேற்கொண்டு அதையும் வேகமாக இழுத்து அல்லது மெதுவாக வெளிவிடுங்கள்.

கான்ட்ராக்க்ஷன்களுக்கு இடையில் இயல்பாக சுவாசியுங்கள் .

பிரசவிக்கும் நேரத்தின்போது , இதேமுறையிலான சுவாச முறையை கான்ட்ராக்க்ஷ்ன்களோடு
கூடுமான வாய் தொடர்ந்து பயன்படுத்து பயன் தரும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here