Home Common Health Problems கால்களிலும் உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்படும் வீக்கத்திற்கான காரணங்கள்

    கால்களிலும் உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்படும் வீக்கத்திற்கான காரணங்கள்

    560
    0
    SHARE

    சாதாரணமாக உடல்நலக்குறையாலும் கடுமையான உடல்நலக் குறையாலும் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. ஆனால் முகத்தில் அல்லது உடலின் வேறு பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் அது பெரும்பாலும் ஆபத்தான உடல்நலக்குறை ஒன்றின் அறிகுறியே.

    பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதங்களில் சில சமயங்களில் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. பொதுவாக இது ஆபத்தானதல்ல. குழந்தையின் எடை, தாயின் கால்களிலிருந்து வரும் சிரைகளை, இரத்தவோட்டம் குறையும் அளவுக்கு, அழுத்துவதால் இது ஏற்படுகிறது. ஆயினும் கர்ப்பணிக்கு இரத்த மிகை அழுத்தம், முகத்தில் வீக்கம், சிறுநீரில் அதிக அளவு புரதம் அல்லது திடீரென எடை அதிகரித்தல் ஆகியவை இருந்தால் உடலில் கர்ப்பகால நச்சு ஏற்பட்டிருக்கலாம். விரைவில் மருத்துவரை அணுகுவது நல்லது.

    ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிற அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிற முதியவர்களுக்கு இரத்தவோட்டக் குறைவால் பெரும்பாலும் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. முதியோர்களுக்கு, இதயக் கோளாறுகள் அல்லது சிலசமயங்களில் சிறுநீரக நோய் மற்றும் தொண்டைப்புண்ணைத் தொடர்ந்து ஏற்படும் சிறுநீர்த்தடத் தொற்று போன்றவை காரணமாகக் கால்களில் வீக்கம் ஏற்படலாம். இரத்தசோகை அல்லது ஊட்டச்சத்துகுறை காரணமாகச் சிறு குழந்தைகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்படலாம். கடுமையான ஊட்டக்குறையால் முகத்திலும் கைகளிலும் கூட வீக்கம் ஏற்படலாம்.

    காலில் கிருமித் தொற்றுக்குள்ளான வெட்டு அல்லது காயம் இருந்தால் தோல் அழற்சி காரணமாகக் காலில் வீக்கம் ஏற்படலாம். காய்ச்சலும் வலியும் இருக்கும். இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால் வலியிலிருந்து விடுபடலாம்.

    சிகிச்சை
    வீக்கத்தைக் குறைக்க, வீக்கம் ஏற்படக் காரணமாய் இருக்கிற நோய்க்குச் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். உணவில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது உப்பே சேர்த்து கொள்ளக்கூடாது.

    சிறுநீரை அதிகம் வெளியேற்ற உதவும் சில மூலிகை கஷாயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் அவை சிறுநீரை அதிகம் கழிக்க வழி வகுக்கிறது.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here